பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

பஜாஜ் பல்சர் 125 பைக்கிற்கு போட்டியாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 125சிசி பைக்கை ஃபியரோ என்ற பெயரில் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கிடைத்துள்ள ஆவண படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

தமிழகத்தை சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் இந்தியாவில் ஸ்கூட்டர்களில் ஆரம்பித்து அன்றாட பயன்பாட்டு மோட்டார்சைக்கிள், ஸ்போர்ட்ஸ்பைக்குகள் என மின்சாரத்தின் உதவியுடன் இயங்கும் தயாரிப்புகள் வரையில் விற்பனை செய்து வருகிறது.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

ஆனால் தற்போதைக்கு டிவிஎஸ் பிராண்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வகையிலான 125சிசி பைக் விற்பனையில் இல்லை. இதனால்தான் விரைவில் புதிய 125சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டுவர டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

இதற்காக ஃபியரோ 125 என்ற பெயரை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளதாக சில படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றன. டிவிஎஸ்-ஸிடம் தற்சமயம் 125சிசி பைக் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முந்தைய காலத்தில் டிவிஎஸ், பிளேம் என்ற பெயரில் 125சிசி பைக் ஒன்றை விற்பனை செய்தது.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

அந்த பைக்கில் வழங்கப்பட்ட 124.8சிசி, 3-வால்வு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் தற்சமயம் டிவிஎஸ் என்ட்ராக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. மேலும் இந்த என்ஜின் தான் சற்று ரீ-ட்யூன் செய்யப்பட்டு ஃபியரோ 125-ல் வழங்கப்படலாம் எனவும் நாங்கள் கருதுகிறோம்.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

என்ஜின் மட்டுமின்றி "ஃபியரோ" என்ற பெயரும் டிவிஎஸ் நிறுவனத்திற்கு புதியது கிடையாது. ஏனெனில் சுஸுகியுடன் கூட்டணியில் இருந்த 2000ஆம் காலக்கட்டங்களில் இந்த பெயரில் 150சிசி பைக் ஒன்றை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் தற்போது 125சிசி பிரிவுக்குள் நுழையவுள்ளது.

பஜாஜ் பல்சருக்கு தயாராகும் போட்டி! புதிய 125சிசி பைக்கை கொண்டுவரும் டிவிஎஸ், பெயர் என்ன தெரியுமா?

ஃபியரோ 125 பைக்கின் வருகையினால் பஜாஜ் பல்சர் 125, ஹீரோ க்ளாமர் மற்றும் ஹோண்டா ஷைன் உள்ளிட்ட பைக்குகளின் போட்டியினையும் டிவிஎஸ் நிறுவனம் எதிர்கொள்ளவுள்ளது. அடுத்த 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டிவிஎஸ் 125சிசி பைக்கின் ஆரம்ப விலை ரூ.70,000-ல் இருந்து ரூ.75,000-க்கு உள்ளாக நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Fiero 125 Name Registered India
Story first published: Friday, November 6, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X