கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

2020-21 நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் விற்பனையான டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை விபரம் வெளிவந்துள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன பிராண்டாக உள்ள தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் இந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் மொத்தம் 8.34 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

இது 8.42 லட்ச டிவிஎஸ் டூ-வீலர்கள் விற்பனையான கடந்த ஆண்டின் இதே இரண்டாம் கால்பகுதியை காட்டிலும் 0.95 சதவீதம் குறைவாகும். நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் அடங்குகின்றன.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

2020 ஜூலை மாதத்தில் மொத்தம் 2.44 லட்ச இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ள டிவிஎஸ் நிறுவனம் அதற்கு அடுத்த 2020 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே 2.77 லட்சம் மற்றும் 3.13 லட்ச தயாரிப்பு இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

இரண்டாம் கால்பகுதி முடிவடைந்த 2020 செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் விற்பனையான மொத்த 8.34 லட்ச டிவிஎஸ் தயாரிப்புகளிவில் 3.66 லட்சம் மோட்டார்சைக்கிள்களாகும். இந்த எண்ணிக்கை 2019 செப்டம்பரில் பதிவான எண்ணிக்கையை காட்டிலும் 5.25 சதவீதம் அதிகமாகும்.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

ஏனெனில் அந்த சமயத்தில் 3.42 லட்ச டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்களே விற்பனையாகி இருந்தன. அதேசமயம் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் இந்நிறுவனம் சற்று சரிவை சந்தித்துள்ளது. 2020 ஜூலை- செப்டம்பரில் 2.70 லட்ச டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

3.33 லட்ச டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் விற்பனையான கடந்த ஆண்டின் இதே கால்பகுதியை காட்டிலும் இந்த எண்ணிக்கை 18.92 சதவீதம் குறைவாகும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் கால்பகுதியில் 1.98 லட்ச டிவிஎஸ் மொபெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டின் 2ஆம் கால்பகுதி உடன் ஒப்பிடுகையில் 17.82 சதவீதம் அதிகமாகும்.

கொரோனா சூழ்நிலையிலும் விற்பனையில் ஜொலிக்கும் டிவிஎஸ்!! தீபாவளி வேற வருதே..

இவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS sold 8.34 lakh two wheelers in india in the second quarter of the financial year
Story first published: Sunday, November 1, 2020, 3:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X