ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அதன் ஸ்போர்ட் 110 மோட்டார்சைக்கிள் ஒரு லிட்டருக்கு 110.12 கி.மீ மைலேஜ் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் புதிய சாதனையாக அமைந்த இதை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தின் லைன்அப்பில் ஸ்போர்ட் வரிசையில் 110சிசி மோட்டார் சைக்கிளும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது.

ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

இந்த நிலையில்தான் தற்போது இந்தியா மற்றும் ஆசியாவின் சாதனை புத்தகங்களில் ‘ஒரு மோட்டார் சைக்கிள் அடைந்த மிக உயர்ந்த சாலை எரிபொருள் செயல்திறன்' என்ற புதிய சாதனையை டிவிஎஸ் ஸ்போர்ட் 110 பைக் படைத்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, டிவிஎஸ் ஸ்போர்ட் அதன் சாலை மைலேஜ் திறன்களுக்காக இந்த சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. முன்னதாக 2019ல் 100சிசி டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்4 பைக் ‘தங்க நாற்கரத்தில் அதிக எரிபொருள் திறனை வெளிப்படுத்தும் மோட்டார்சைக்கிள்' என்ற சாதனையை படைத்திருந்தது.

ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

அப்போது டிவிஎஸ் ஸ்போர்டின் மைலேஜ் 76.4 kmpl ஆக பதிவானது. தற்போதைய சாதனையை பவித்ரா பாட்ரோ என்பவர் 54 லேப்களில் மொத்தம் 1021.90 கி.மீ தூரத்தை 9.28 லிட்டர் எரிபொருள் நுகர்வுடன் நிகழ்த்தியுள்ளார். பவித்ரா இந்த பயணத்தை 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13, 2020 அன்று ஐக்கிய இந்திய பயண தொடரின் ஒரு பகுதியாக முடித்தார்.

ஒரு லிட்டருக்கு 110.12கிமீ மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

இந்த சாதனை குறித்து, பயணிகள் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்டின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) அனிருத்தா ஹல்தார் கூறுகையில், "பாரத் கா மைலேஜ் சாம்பியன் என்ற உறுதிமொழியின்படி, டிவிஎஸ் ஸ்போர்ட் மீண்டும் சாதனை படைத்துள்ளது.

ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

டிவிஎஸ் ஸ்போர்ட் அதன் சாதனையை எரிபொருள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன் சிறப்பித்து, வியக்க வைக்கும் அளவிற்கு பிஎஸ்6 இடி-எஃப்ஐ தொழில்நுட்பத்தின் காரணமாக 110.12 kmpl எனற மைலேஜ் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது.

ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

கடந்த ஆண்டு, டிவிஎஸ் ஸ்போர்ட் பிஎஸ்4 76.4 kmpl டெலிவரி மூலம் முதன்முறையாக இந்த சாதனையை உருவாக்கி இருந்தது" என கூறினார். டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கானது எக்கோத்ரஸ்ட் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் (இடி-எஃப்ஐ) தொழில்நுட்பத்தை கொண்ட பிஎஸ்6 110 சிசி டூரலைஃப் என்ஜினால் இயக்கப்படுகிறது.

ஒரு லிட்டருக்கு 110.12kmpl மைலேஜ்... ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டிவிஎஸ் பைக்...

இந்த தொழிற்நுட்பம் 15% கூடுதல் மைலேஜ் வழங்க உதவுகிறது. ET-Fi அனைத்து இயக்க நிலைமைகளிலும் சிறந்த தொடக்கத்தன்மையையும், மென்மையான மற்றும் சீரான இயந்திர செயல்திறனுடன் சிறந்த சுத்திகரிப்பையும் உறுதி செய்கிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS Sport sets a new fuel efficiency record, achieves mileage of 110.12kmpl
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X