பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்துடன் இணைந்து புதிய 310சிசி மோட்டார்சைக்கிளை இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

வருங்கால தயாரிப்புகளுக்காக தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனமும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் என்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமும் கூட்டணியில் உள்ளன.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

பிஎம்டபிள்யூவின் ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் என்ற இரட்டை பைக்குகள் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் இத்தகைய வெற்றியை இந்தியாவில் இந்த நிறுவனத்தால் காண முடியவில்லை.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

ஆனால் அதேநேரம் இந்த பிஎம்டபிள்யூ இரட்டை பைக்குகளுக்கு நம் நாட்டு சந்தையில் போட்டியாக உள்ள டிவிஎஸ் ஆர்ஆர்310 அதிகளவிலான வாடிக்கையாளர்களை சேர்த்து வைத்துள்ளது. இதனால் அதே 310சிசி ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட புதிய மோட்டார்சைக்கிளை கொண்டுவர டிவிஎஸ் முனைப்பு காட்டி வருகிறது.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

நிறுவனத்தின் சமீபத்திய மேம்பாடுகள் குறித்து டிவிஎஸ் மோட்டாரின் தலைவரும் சிஇஒ-வுமான கே.என்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், கூட்டணி செல்லும் விதத்தை பார்த்து பிஎம்டபிள்யூ மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

ஜி310ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகியவற்றின் உலகளாவிய வெற்றி விகிதத்தால் அவற்றை அடிப்படையாக கொண்ட நான்காவது தயாரிப்பு ஆரம்பக்கட்ட பணிகளில் உள்ளது என கூறிய அவர், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து மேலும் ஒரு வேரியண்ட் உள்ளது எனவும் கூறினார்.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

இதனால் வழக்கமான 310சிசி ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட புதிய மோட்டார்சைக்கிளை அடுத்த 2021ஆம் ஆண்டில் டிவிஎஸ் பிராண்டில் இருந்து எதிர்பார்க்கலாம். குறைந்தது மோட்டார்சைக்கிளின் அறிமுகம் குறித்த தெளிவான பதிலாவது 2021ல் வெளிவந்துவிடும்.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

முதன்முதலாக 2017ல் தற்போது விற்பனையில் உள்ள ஆர்ஆர்310 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. அதன்பின் பிஎஸ்6 என்ஜின் மற்றும் சில காஸ்மெட்டிக் அப்கிரேட்களுடன் 2020 ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் இந்த 2020ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிஎம்டபிள்யூ உதவியுடன், டிவிஎஸ் பிராண்டில் உருவாகும் மற்றொரு புதிய 310சிசி மோட்டார்சைக்கிள்!!

அடுத்ததாக இந்த கூட்டணியில் இருந்து வெளிவரும் 310சிசி மோட்டார்சைக்கிள் அட்வென்ச்சர் ரகத்தை சார்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த புதிய டிவிஎஸ் மோட்டார்சைக்கிளில் நீண்ட ட்ராவல் சஸ்பென்ஷன், குறைவான கியர் விகிதம் மற்றும் வெவ்வேறு விதமான சாலைகளுக்கு ஏற்றவாறு இயங்கும் விதத்தில் வேறுபட்ட ரைடிங் மோட்களை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs
English summary
TVS to launch all new 310cc motorcycle in India in alliance with BMW Motorrad.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X