டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

2021 டுகாட்டி மான்ஸ்டர் பைக்கின் டீசர் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

முன்னதாக இந்த வருட துவக்கத்தில் டுகாட்டியின் நாக்டு மோட்டார்சைக்கிளான மான்ஸ்டர் ஜெர்மனியில் தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டு இருந்தது. அப்போது நமக்கு பைக்கை பற்றிய சில விபரங்கள் கிடைத்திருந்தன.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

இந்த நிலையில் தற்போது இந்த பைக்கின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டுகாட்டி ஸ்பெயின் நிறுவனத்தினால் இந்த டீசர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பைக்கை பற்றிய பெரியளவில் எந்த விபரத்தையும் பெற முடியவில்லை.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

டீசர் படத்தில் பைக்கின் பருத்த பெட்ரோல் டேங்க் மட்டும் தான் காட்டப்பட்டுள்ளது. டேங்கில் டுகாட்டி ஸ்டிக்கர் சிவப்பு நிறத்திலும், மான்ஸ்டர் ஸ்டிக்கர் கருப்பு நிறத்தில் உள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள டுகாட்டி மான்ஸ்டரை காட்டிலும் அதன் 2021 வெர்சன் மிகவும் நேர்த்தியான பெட்ரோல் டேங்கை பெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

இது தவிர்த்து புதிய மான்ஸ்டர் பைக்கை பற்றிய எந்த விபரமும் இந்த டீசரில் கிடைக்க பெறவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி பார்த்தோமேயானால் 2021 டுகாட்டி தற்போதைய ட்ரெல்லிஸ் ஃப்ரேம்மிற்கு மாற்றாக அலுமினியம் ஃப்ரேம்-ஐ பெற்று வரவுள்ளது.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

இது உலகளாவிய பைக் பிரியர்களை எவ்வாறு கவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இயக்கத்திற்கு லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படலாம். இந்த என்ஜின் எத்தக்கைய ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது பைக்கின் அறிமுகத்தின்போதுதான் தெரிய வரும்.

டுகாட்டியின் புதிய தயாரிப்பு, 2021 மான்ஸ்டரின் டீசர் முதன்முறையாக வெளியீடு!!

இந்த 2021 டுகாட்டி மோட்டார்சைக்கிள் திருத்தியமைக்கப்பட்ட இரட்டை-பேரல் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தையும் பெற்றுவரும் என கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் புதிய டியாவெல் 1260 லம்போர்கினி எடிசன் பைக்கை சமீபத்தில் டுகாட்டி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2021 Ducati Monster teased for first time, shows dark matte grey colour
Story first published: Friday, November 27, 2020, 15:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X