கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படும் 4 பைக்குகள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த செய்தி உங்களுக்குதான். ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு புத்தம் புதிய மீட்டியோர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் 2021ம் ஆண்டு 4 பைக்குகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 350 (Royal Enfield Interceptor 350)

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 350 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்த ஸ்பை படங்கள் நமக்கு ஏராளமான தகவல்களை தரவில்லை என்றாலும், இது பார்ப்பதற்கு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 போன்று இருந்தது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ஆனால் இதில் சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜின் இன்டர்செப்டார் 350 பைக்கிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்வது என ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பதை வைத்து பார்க்கும்போது, இந்த பைக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Next-gen Royal Enfield Classic 350)

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலையும் ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்டியோர் 350 பைக்கின் இன்ஜின்தான் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

இதுதவிர ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற வசதிகளும் இடம்பெறலாம். தற்போதைய தலைமுறை மாடலின் ரெட்ரோ டிசைன் தக்க வைக்கப்பட்டாலும், அதிநவீன வசதிகளுடன் கிளாசிக் 350 புதிய அவதாரம் எடுக்கவுள்ளது. ஹைனெஸ் சிபி350 மூலமாக ஹோண்டா நிறுவனம் போட்டியை வழங்க தொடங்கியுள்ள நிலையில், கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ராயல் என்பீல்டு 650 சிசி க்ரூஸர் (கேஎக்ஸ் 650) Royal Enfield 650cc Cruiser (KX650)

இந்தியாவில் மற்றொரு ராயல் என்பீல்டு பைக் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் நடப்பாண்டு வெளியானது. கான்டினென்டல் ஜிடி மற்றும் இன்டர்செப்டார் 650 பைக்குகளில் உள்ள அதே 650 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ஆனால் உண்மையான க்ரூஸர் பைக்கின் ஸ்டைலில் இது டிசைன் செய்யப்படுகிறது. சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட பைக், கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் இருந்தது. இதை வைத்து பார்க்கும்போது இந்த 650 சிசி க்ரூஸர் பைக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் (New Royal Enfield Himalayan)

மேம்படுத்தப்பட்ட புதிய ஹிமாலயன் பைக்கை 2021ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்ய ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஹிமாலயன் பைக்கில் ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற புதிய வசதிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யுஎஸ்பி சார்ஜர் மற்றும் புதிய வண்ண தேர்வுகளும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஞ்சம் பொறுங்க! புதுசு புதுசா ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனைக்கு வரப்போகுது! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

ஆனால் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் அதே 411 சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் உடன்தான் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.3 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதேபோல் டிசைனிலும் பெரிதாக மாற்றங்கள் செய்யப்படாது என கூறப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

English summary
Upcoming Royal Enfield Bikes - Interceptor 350, Next-gen Classic 350, 650cc Cruiser KX650. Read in Tamil
Story first published: Monday, December 28, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X