அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

பழமையான விண்டேஜ் மோட்டார்சைக்கிள்கள் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட செய்திகளை இதற்கு முன் பலமுறை நமது செய்திதளத்தில் பார்த்திருப்போம். இவற்றில் பெரும்பாலனவை யமஹா ஆர்எக்ஸ் அல்லது ராயல் என்பீல்டு பைக்குகளாகதான் இதுவரை இருந்துள்ளன.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

இம்முறை, தற்சமயம் எங்கும் பார்க்க முடியாத அரிய மோட்டார்சைக்கிளான சூரஜ் 325-க்கு அதன் உரிமையாளர் புத்துயிர் கொடுத்துள்ள செய்தியை பார்க்க போகிறோம். இந்த மோட்டார்சைக்கிளின் சிறப்பே அதன் டீசல் என்ஜின் தான். விற்பனைக்கு வந்த மிகவும் சில டீசல் பைக்குகளில் சூரஜ் 325-இம் ஒன்று.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

இதுதான் தற்போது விற்பனையில் இருந்த சமயத்தில் கொண்டிருந்த தோற்றத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து ராயல் ரோட்ஸ் 500 என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் இந்த சூரஜ் பைக் கோயம்புத்தூரை சேர்ந்தது என்பதை அறிய முடிகிறது.

இந்த வீடியோவில் காட்டப்படும் நபர் தான் பைக்கின் உரிமையாளர். பல வருடங்களுக்கு முன்பு இந்த சூரஜ் பைக்கை வேறொரு நபரிடம் இருந்துதான் இவரும் வாங்கியுள்ளார். முந்தைய உரிமையாளர் முழுக்க முழுக்க கருப்பு நிற பெயிண்ட் மற்றும் ராயல் என்பீல்டு ஸ்டிக்கர்கள் உடன் இந்த பைக்கை தனக்கு வழங்கியதாக கூறும் இவர் முழு பைக்கையும் திருத்தியமைக்க அருகில் இருந்த மெக்கானிக் கடையை அணுகியுள்ளார்.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

இதன் பாகங்களை மீண்டும் பெறவதற்கு நிச்சயம் இவர்கள் சிரமப்பட்டிருப்பார்கள். ஏனெனில் பைக்கை முழுவதும் மாற்றியமைக்க கிட்டத்தட்ட 1 வருடம் தனக்கு தேவைப்பட்டதாக உரிமையாளர் இந்த வீடியோவில் கூறியுள்ளார். வேறொரு பைக்கில் இருந்து பாகங்களை எடுத்து பொருத்துவது சற்று கடினமான பணி என்றாலும் மொத்த வேலையும் விரைவாகவே முடிந்திருக்கும்.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

ஆனால் இந்த சூரஜ் 325 பைக்கின் உரிமையாளர்கள் ஒரிஜினல் பாகங்களை பொருத்தவே விருப்பப்பட்டு நீண்ட மாதங்கள் நேரம் எடுத்து கொண்டு பைக்கை செதுக்கியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இந்த பைக்கில் கிரேவ்ஸ் லோம்பார்டினி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

அதிக அளவிலான எரிபொருள் திறனை வழங்கக்கூடிய இந்த டீசல் என்ஜின் மூலம் பைக் அதிகப்பட்சமாக ஒரு லிட்டர் டீசலுக்கு 70- 80 கிமீ வரை இயங்கும். பைக்கின் எரிபொருள் டேங்கின் கொள்ளளவு 8 லிட்டர் ஆகும். இந்த வகையில் முழு டேங்கில் சுமார் 600 கிமீ வரையில் இந்த பைக்கில் பயண செய்ய முடியும்.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

தற்போதைய டீசல் விலையுடன் கணக்கு போட்டு பார்த்தால், 1 கிமீ பயணத்தை இந்த பைக் வெறும் 1 ரூபாயில் வழங்கும். இதன் என்ஜினும் திருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட பழைய தட்டை என்ஜினில் பார்க்க முடிகிறது. பைக்கின் எக்ஸாஸ்ட் குழாயை பார்த்தால் உங்களுக்கு சில டிராக்டர்கள் ஞாபகத்திற்கு வரலாம்.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

90ஆம் காலக்கட்டங்களில் சூரஜ் பிராண்ட் டிராக்டர் தயாரிக்கும் நிறுவனமாகவே பார்க்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், டிராக்டர்கள் மூலமாக தான் அந்த சமயத்தில் சூரஜ் சந்தையில் பிரபலமானது. பிறகு மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பிலும் இறங்கிய இந்நிறுவனத்தால் பைக்குகளின் விற்பனையில் நீண்ட நாட்களுக்கு நிலைக்க முடியவில்லை.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

இதற்கு சில காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம், இதன் பைக்குகளில் பொருத்தப்பட்ட டீசல் என்ஜின் ராயல் என்பீல்டு டீசல் என்ஜின்களின் டிசைனில் இருந்ததால் பலர் சூரஜ் பைக்குகளை ராயல் என்பீல்டு பைக்குகள் என்றுதான் நினைத்தனர். அதாவது சூரஜ் பைக்குகளும் விற்பனையில் உள்ளன என்பது பலருக்கு தெரியாமலேயே இருந்தது.

அரிதினும் அரிதான டீசல் பைக்... சூரஜ் 325 டீசல்... மீண்டும் புதிய தோற்றத்தில்...!

அதுமட்டுமில்லாமல் இந்நிறுவனத்தின் பைக்குகள் ராயல் என்பீல்டு பைக்குகளை காட்டிலும் எடை மிக்கதாக இருந்தன. ஆனால் எப்படியிருந்தாலும், இந்த சூரஜ் 325 டீசல் பைக் நாம் சமீபத்தில் பார்த்த திருத்தியமைக்கப்பட்ட பைக்குகளில் அழகானது மற்றும் அரிதானது.

Most Read Articles

English summary
Meet the super RARE Sooraj 325cc Diesel motorcycle that delivers 80 KMPL Beautifully restored
Story first published: Monday, October 19, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X