ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

அசத்தும் வண்ணக் கலவையில், வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தையில் வெஸ்பா ஸ்கூட்டர்கள் மிகவும் பிரிமீயமாகவும், நெடிய பாரம்பரியம் கொண்ட மாடல்களாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்களுக்கென தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. குறிப்பாக, பிரத்யேகமான அம்சங்கள், தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் வெஸ்பா ஸ்கூட்டர்களை தேர்வு செய்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு அவ்வப்போது விசேஷ மாடல்களையும் வெஸ்பா அறிமுகப்படுத்தி வருகிறது.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

அந்த வகையில், வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் என்ற விசேஷ ஸ்கூட்டர் மாடலை வெஸ்பா நிறுவனம் வரும் செப்டபம்பர் 1ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர உள்ளது. கடந்த பிப்ரவரியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த ஸ்கூட்டர் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

வெஸ்பா எஸ்எக்ஸ்எல்-150 ஸ்கூட்டரின் அடிப்படையிலான விசேஷ அம்சங்கள் கொண்ட மாடலாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 1960களில் வெஸ்பா ரேஸ் ஸ்கூட்டர்களின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் பல அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

வெள்ளை வண்ணத்தில் சிவப்பு வண்ண ஸ்டிக்கர் அலங்காரத்துடன் இந்த ஸ்கூட்டர் வந்துள்ளது. தங்க வண்ண பூச்சு கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மிகவும் தனித்துவமாக தெரிகிறது.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.32 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

புதிய வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், யுஎஸ்பி சார்ஜர், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

இந்த ஸ்கூட்டரில் 11 அங்குல முன்சக்கரமும், 200 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. பின்புறத்தில் 10 அங்குல சக்கரமும் 140 மிமீ டிரம் பிரேக்கும் உள்ளது. இரண்டு சக்கரங்களிலும் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் மிக முக்கிய பாதுகாப்பு வசதியாக இருக்கும்.

ஸ்பெஷலான வெஸ்பா ரேஸிங் சிக்ஸ்டீஸ் எடிசன் ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்!

இது லிமிடேட் எடிசன் மாடலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டரைவிட ரூ.5,000 முதல் ரூ.7,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #வெஸ்பா #vespa
English summary
Vespa is all set to launch of its Racing Sixties edition scooter on September 1 on India. It's based on the Vespa SXL-150 scooter with aesthetic changes.
Story first published: Saturday, August 29, 2020, 15:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X