புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... இவ்வளவு விலையா..?

பிரபல ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான வெஸ்பா, ரேசிங் சிக்ஸ்டிஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டர் ஒன்றை டெல்லி அருகே நடைபெற்று வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்கூட்டர் அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து சந்தைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

ஆனால் இந்த ரேசிங் ஸ்கூட்டர் குறைவான எண்ணிக்கையிலேயே இந்திய சந்தையை அடையவுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் அறிமுகமான எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டர் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கூட்டரில் அந்த மாடலில் இருந்து வேறுப்படுவதற்காக சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

இந்த ரேசிங் ஸ்கூட்டரில் முதன்மையான நிறமாக வெள்ளையும், பக்கவாட்டு மற்றும் முன்புற பேனல்களில் சில இடங்களில் சிவப்பும், சக்கரங்களில் கோல்ட் நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது. பைக்கின் வெள்ளை நிறத்தில் இருக்கை மெல்லிய கோடு போன்ற டிசைனை பெற்றிருக்கிறது.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

மற்ற பாகங்களான ஹெட்லைட்டை சுற்றியுள்ள பார்டர்கள், கண்ணாடிகள் மற்றும் எக்ஸாஸ்ட் ஷீல்டு போன்றவை அனைத்தும் கருமை நிறத்தில் உள்ளன. வழங்கப்பட்டுள்ள அம்சங்களில் மிக முக்கியமானதாக பார்த்தால், இந்த லிமிடேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்வரும் காற்றை தடுப்பதற்காக பெரிய அளவில் விண்ட்ஷீல்டை பெற்றுள்ளது.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ரேசிங் ஸ்கூட்டரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 150சிசி, மூன்று-வால்வு, எரிபொருள்-இன்ஜெக்டட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7,600 ஆர்பிஎம்-ல் 10.4 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 10.6 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக ஸ்கூட்டருக்கு வழங்கவுள்ளது.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

ப்ரேக்கிங் பணிக்காக வெஸ்பாவின் இந்த புதிய ஸ்கூட்டரில் 200மிமீ டிஸ்க் முன்புறத்திலும், 140மிமீ ட்ரம் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பும் நிலையாக ஸ்கூட்டரில் உள்ளது. மேலும் இந்த ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் விளக்கு மற்றும் யூஎஸ்பி சார்ஜரும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

இதன் தயாரிப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெஸ்பா எஸ்எக்ஸ்எல்150 ஸ்கூட்டர் மாடல் ரூ.1.26 லட்சத்தை விலையாக பெற்றுள்ளது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த ரேசிங் ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

ஏற்கனவே கூறியதுபோல், அடுத்த மாதத்தில் சந்தையில் களமிறங்கவுள்ள இந்த புதிய ஸ்கூட்டரின் குறைவான யூனிட்களே விற்பனை செய்யப்படவுள்ளன. பெயருக்கு ஏற்றாற்போல் வெறும் 60 வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டர்கள் சந்தைப்படுத்தப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

புதிய வெஸ்பா ரேசிங் சிக்ஸ்டிஸ் ஸ்கூட்டரின் இந்திய அறிமுக விபரம் வெளிவந்தது... விலை தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க...!

இந்த ஸ்கூட்டர் அடுத்த மாதம், டிஸ்க் ப்ரேக் தொழிற்நுட்பத்தை கொண்ட அப்ரில்லாவின் ஸ்ட்ரோம் 125 ஸ்கூட்டருடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய வெஸ்பா ஸ்கூட்டரின் ரேசிங் என்ற பெயர், 1960களில் பிரபலமாக இருந்த ரேசிங் கார்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Vespa Racing Sixties Unveiled At Auto Expo
Story first published: Friday, February 7, 2020, 20:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X