Just In
- 22 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக சிறிய ஃபோல்டபிள் மின்சார பைக்! இதோட விலைய கேட்டா மயக்கமே போட்ருவீங்க
உலகின் மிகச் சிறிய ஃபோல்டபிள் மின்சார பைக் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

நாம் இதுவரை ஹோண்டா நிறுவனத்தின் நவிதான் மிகச்சிறிய இருசக்கர வாகனம் என நினைத்து வந்தோம். ஆனால், உலகில் இதைவிட மிகச்சிறிய வாகனங்கள் பல இருக்கின்றன. இதை உறுதிச் செய்கின்ற வகையில் ஓர் மின்சார வாகனத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மின்சார இருசக்கர வாகனம் மிகச்சிறிய ஃபோல்டபிள் வாகனம் என்பதற்கான கின்னஸ் சாதனையைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் உருவம் மிகச் சிறியதாக காணப்பட்டாலும், விலை அதிகளவில் உள்ளது. அதன் விலையைக் கேட்கும்போது இவ்வளவு சிறிய பைக்கிற்கு இவ்ளோ விலையா என கேட்கத்தோன்றும்.

அப்படி என்ன விலை-ங்க அது? என்று கேட்கிறீர்களா, இதற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 4,996 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 3.77 லட்சம் ஆகும்.
அதாவது, இந்த விலையானது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கான்டினென்டல் பைக்கிற்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது. இந்த பைக் தற்போது இந்தியாவில் ரூ. 2.80 லட்சம் என் விலைக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மாடல் வி என்ற பெயரில் ஒய்க்பைக் (YikeBike) எனும் நியூசிலாந்து நிறுவனம்தான் இந்த பைக்கை உலக நாடுகள் பலவற்றில் விற்பனைச் செய்து வருகின்றது.
இதன் உருவம் மற்றும் பயன்படும் விதம் முற்றிலும் வித்தியாசமானது ஆகும். இந்த பைக்கின் புகைப்படத்தைப் பார்த்தாலே உங்களுக்கு பாதி தகவல்கள் புரிந்துவிடும்.

இந்த இருசக்கர வாகனத்தின் இருக்கை அமைப்பானது ஹேண்டில் பார்மீது அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது அமர்ந்தபடியே, அந்த பார்களை (கைப்பிடி) வலது மற்றும் இடது என திருப்புவதன்மூலம் இருசக்கர வாகனத்தின் திசையைக் கட்டுப்படுத்த முடியும். இது ரிஸ்கா இருக்காதா என்று பலருக்கு கேள்வி எழும்பலாம். இது மிகக் குறைந்த வேக திறன் கொண்ட மின்சார வாகனம் என்பதால் கட்டுப்படுத்துவது மிக எளிது.

இதனால்தான் உலக நாடுகள் பல இதன் விற்பனைக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றன. இது அதிகபட்சமாக மணிக்கு 23 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. இந்த அதிகபட்ச வேகத்தை 0.2kW திறன் கொண்ட பிரஷ்லெஸ் மோட்டாரே மாடல் வி இ-பைக்கிற்கு வழங்குகின்றது.

இந்த மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தியை வழங்குவதற்காக 313 W/h லித்தியம் அயன் பேட்டரி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 90 நிமிடங்களே போதும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் இதனை 20 கிமீ தூரம் வரை இயக்க முடியும்.

ஒய்க்பைக் மாடல்வி இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, மூன்று சக்கரங்கள் மற்றும் இரு சக்கரங்கள் ஆகியவை ஆகும். இதில், முன்பக்க வீல் சற்று பெரியதாகவும் (20 இன்ச்), பின் பக்க வீல் மிகச் சிறியதாகவும் (8 இன்ச்) பொருத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், இந்த மின்சார பைக் கோல்ட், சில்வர் மற்றும் சார்கோல் ஆகிய நிறத்தேர்வுகளிலும் இந்த மின்சார பைக் கிடைத்து வருகின்றது.

இவற்றுடன், மாடல் வி மின்சார பைக்கில் நிரந்தரமான எல்இடி மின் விளக்கு, ஆம்பர் மின் விளக்கு பக்கவாட்டிலும், சிவப்பு நிற மின் விளக்கு பின் பக்கத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனம் சாலையில் செல்லும்போது தேவையான வெளிச்சம் மற்றும் அடையாளத்தை பிறருக்கு வழங்கும்.

மேலும், இந்த பைக்கில் காணப்படும் மிகச் சிறந்த அம்சமாக ஃபோல்டிங் வசதி உள்ளது. இதனை முழுமையாக மடித்து வைத்தால் 660 x 190 x 550 மிமீ என்ற அளவிலும், மடிக்காத நிலையில் 1050 x 640 x 825 மிமீ என்ற அளவிலும் இருக்கின்றது.
மேலும், பைக்குடன் சிறப்பு கருவிகளாக டூல் கிட், ஷோல்டர் ஸ்டிராப், டிஸ்பிளே ஸ்டாண்ட், பேட்டரி சார்ஜர் மற்றும் ஸ்டோரேஜ் பேக் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.