புதிய சியோமி மின்சார மொபட்டுகள் விற்பனைக்கு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்!

மலிவு விலையில் ஸ்மார்ட் போன்களை விற்பனைச் செய்து வரும் சியோமி நிறுவனம் மிகக் குறைந்த விலையுடைய மின்சார மொபட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

செல்போன் விற்பனையில் ஈடுபட்டு வரும் சியோமி நிறுவனம் சில இரண்டாம் நிலை அத்தியாவசிய பொருட்களையும் தயாரித்து வருகின்றது. குறிப்பாக, மாஸ்க், ஏர் ஃபில்டர் உள்ளிட்ட கருவிகளை அது தயாரித்து மலிவு விலையில் விற்பனைச் செய்து வருகின்றது.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

இத்துடன், செல்போனுக்கு தேவையான இயர்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஸ்மார்ட் பேன்ட் கை கடிகாரம், சூட் கேஸ், செக்யூரிட்டு கேமிரா மற்றும் வை-ஃபை எக்ஸ்டெண்டர் உள்ளிட்ட சாதனங்களையும் அது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது.

இதைத்தொடர்ந்து, தன்னுடைய விற்பனை ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் அந்நிறுவனம் புதிதாக மின்சார இருசக்கர வாகன தயாரிப்பிலும் அண்மையில் களமிறங்கியது.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட மொபெட்டுகள் தற்போது சீனாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மற்ற பொருட்களைப் போன்றல்லாமல் இந்த மின்சார மொபட்டுகள் தற்போது சீனாவில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.

இது மிக விரைவில் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதில் இந்தியாவும் அடங்கும்.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

சியோமி நிறுவனம் சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்பதானலயே தயாரிப்புகளை முதன் முதலில் அந்த நாட்டிலேயே அறிமுகம் செய்து வருகின்றது. அதன்படியே, தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஏ1 மற்றும் ஏ1 ப்ரோ ஆகிய மின்சார மொபட்டுகள் சீனாவில் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

இந்த மொபட்டுகள் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகின்றது. நகர பயன்பாட்டைக் கருத்தில் உருவாக்கப்பட்டதால் இதற்கு இத்தகைய சிறிய உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. மொபட் அதிகபட்சமாக 16 இன்ச் அளவுள்ள வீல்களின் உதவியுடன் சாலையில் வலம் வரும்.

மேலும், இதற்கான திறனை வழங்கும் மின் மோட்டார் இருக்கைக்கு கீழே பொருத்தப்பட்டிருக்கின்றது. அது, 750 வாட் திறன் கொண்டதாகும்.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

நகரப் பயன்பாட்டைக் கொண்டு இந்த மின்சார மொபட் உருவாக்கப்பட்டிருப்பதால் அது மணிக்கு 25கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும் வகையில் திறன் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த வேகத்தின் மொபட்டின் ரேஞ்சை உயர்த்தி வழங்க உதவும். ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மொபட்டில் வேண்டுயமானால், மற்றொருவர் அமரும் வகையில் கேரியரை ஃபிட் செய்து கொள்ளலாம்.

MOST READ: வேற-லெவல் ஸ்டைலுக்கு மாறிய பிரபல ஹீரோயினுடைய கார்.. யாருடையது என தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க!

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

இருவிதமான தேர்வில் கிடைக்கும் மொபட்டுகளில் பேட்டரி வித்தியாசம் உள்ளது. அதாவது, ஏ1 மொபட்டில் 768Wh திறனுடைய லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 60 கிமீ மைலேஜை வழங்கும்.

இதேபோன்று, ஏ1 ப்ரோ மொபட்டில் உயர் திறன் கொண்ட 960Wh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ தூரம் வரை செல்லும்.

MOST READ: கொரோனா வைரசுக்கு எதிரான போர்... மிகப்பெரிய உதவியை செய்து நெகிழ வைத்த ஓலா... என்னனு தெரியுமா?

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

ஒரு வேலை நீங்கள் இந்த மொபட்டுகளின் அனைத்து சார்ஜ் திறனைப் பயன்படுத்தி டிரை செய்துவிட்டால் கவலையேப் பட வேண்டாம். ஏனென்றால் இதில் பெடல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிதிவண்டியாகவும் எலெக்ட்ரிக் மொபட்டுகளை நம்மால் பயன்படுத்த முடியும்.

MOST READ: தேசிய ஊரடங்கு உத்தரவு.. ஆட்டம் போடும் அரசியல்வாதிகள்... மக்களை அதிரவைத்த சம்பவம்!

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

மேலும், இந்த மொபட்டின் பேட்டரிகளை தனியாக கழட்டி சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் அதனை பாதுகாப்பாக கழட்டி வீட்டிலோ அல்லது அலுவலக்திலோ வைத்து நம்மால் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

இதுமட்டுமின்றி, இந்த மொபட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிடும் வகையில் டிஎஃப்டி கலர் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி மின் விளக்கு ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அம்சம் ஏ1 மற்றும் ஏ1 ப்ரோ ஆகிய இரு மொபட்டிற்கும் பொருந்தும்.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

அதேசமயம், ஏ1 ப்ரோ மொபட்டில் சில அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கின்றன. தொடுதிரை மற்றும் வாய்ஸ் கன்ட்ரோல் அம்சம் உள்ளிட்டவை ஆகும். இத்துடன் உயர் தரத்தில் காட்சிகளைப் பதிவு செய்யும் கேமிராவும் இந்த மொபட்டுகளில் வழங்கப்பட்டிருக்கின்றன.

புதிய மின்சார மொபட்டுகளை விற்பனைக்கு அறிமுகம் செய்த சியோமி... விலை எவ்வளவு தெரிஞ்சா அசந்துருவீங்க பாஸ்...

இந்த பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதியுடைய மொபட்டுகள் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது, இந்திய மதிப்பில் ரூ. 31,633 என்ற மிகக் குறைந்த ஆரம்ப விலையில் அவை விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

நம்ம ஊரில் விற்பனைச் செய்யப்பட்டு வரும் பிஎஸ்6 டிவிஎஸ் எக்ஸ்எல்100 மொபட்டைக் காட்டிலும் இது குறைந்த விலை ஆகும். டிவிஎஸ் எக்ஸ்எல்100 இந்தியாவில் ரூ. 42,283 என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Xiaomi Launched A1 and A1 Pro Electric Moped In China. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X