Just In
- 4 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 7 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யமஹா ஃபஸ்ஸினோ 125 ஸ்கூட்டரை ஓட்டி செல்ல ஓர் அரிய வாய்ப்பு... ஆயிரம் ஃபோட்டோக்களை அனுப்பினா போதும்..!
யமஹா நிறுவனம் மிகவும் தனித்துவமான ஓர் திட்டத்தை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிறப்பு திட்டம் ஒன்றை இந்தியாவில் கொண்டு வந்துள்ளது. 'டெஸ்ட் ரைட் மை யமஹா' (Test Ride My Yamaha) எனும் திட்டத்தையே அது தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தனது புதுமுக 125 சிசி ஸ்கூட்டர்களை அது புரமோட் செய்ய தொடங்கியுள்ளது. யமஹாவின் பழைய தயாரிப்புகளைக் காட்டிலும் புதிய ஸ்கூட்டர்கள் எக்கச்ச வசதிகளைக் கொண்டதாக இருக்கின்றன. குறிப்பாக, அவை அதிக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக காட்சியளிக்கின்றன.

இப்படியான வசதிகளைக் கொண்ட வாகனங்களை இயக்க பழைய தயாரிப்பு பயனர்களை ஊக்குவிப்பதன்மூலம் நவீன வசதி கொண்ட புதுமுக வாகனங்களின் பக்கம் அவர்களை ஈர்க்க முடியும் என யமஹா நம்புகின்றது. எனவேதான் இதுவரை எந்தவொரு நிறுவனமும் வெளியிடாத தனித்துவமான டெஸ்ட் டிரைவ் திட்டத்தை யமஹா வெளியிட்டிருக்கின்றது.

ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ, ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகியவை மிகவும் அட்டகாசமான சிறப்பு வசதிகளுடன் தற்போது விற்பனைக்குக் கிடைத்து வருகின்றன. இவை ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர், ஸ்டாப் மற்றும் ஸ்டாப் சிஸ்டம், சிறப்பான பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன் சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜினை ஆன் செய்ய முடியாத புதிய சிறப்பு வசதியும் இவற்றில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கண்டு நிச்சயம் தங்களின் வாடிக்கையாளர்கள் வியப்பார்கள் என்கிற காரணத்தினாலயே யமஹா புதிய டெஸ்ட் ரைட் மை யமஹா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் டெஸ்ட் டிரைவ் செய்யலாம் யமஹா தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, புதிய சிறப்பு போட்டி ஒன்றையும் யமஹா அறிவித்துள்ளது.

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் நபருக்கு புதிய யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களின் டெஸ்ட் டிரைவின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை யமஹா சிறப்பு செயலின் வாயிலாக அப்லோட் செய்ய வேண்டும்.

20 முறை அப்லோட் செய்தால் யமஹாவின் பையும், 50 முறை அப்லோட் செய்தால் யமஹாவின் டீ-சர்ட்டும், 1000 முறை அப்லோட் செய்தால் ஸ்கூட்டரை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கின்றது. இந்த போட்டி நிச்சயம் யமஹா வாடிக்கையாளர்களை டெஸ்ட் டிரைவ் செய்ய ஈர்க்கும் என நம்பப்படுகின்றது.

இந்தியாவில் 125 சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதனடிப்படையிலேயே யமஹா நிறுவனம் அதன் பிரபலமான இருசக்கர வாகனங்களில் ப்யூவல் இன்ஜெக்சன் திறன் கொண்ட 125 சிசி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.

எதிர்பார்த்தபடியே இவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த நிலையில், தங்களின் பழைய தயாரிப்புகளைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை புதுமுக வாகனங்களை நோக்கி நகர்த்துகின்ற வகையில் இந்த சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றது.