Just In
- 22 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- News
எல்லாம் கூடி.. வெண்ணை திரண்டு வரும்போது.. இப்படி பானையை போட்டு உடைக்கிறாரே பாரதி!
- Movies
'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யமஹாவின் புதிய 300சிசி அட்வென்ஜெர் பைக்... உலகளவில் பிரபலமான டெனெரே 700-ன் அடிப்படையில் உருவாகுகிறது
யமஹா டெனெரே 700 பைக்கை அடிப்படையாக கொண்ட 300சிசி அட்வென்ஜெர் பைக் சந்தையில் அறிமுகமாகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா டெனெரே 700 சர்வதேச சந்தையில் மிக பிரபலமான அட்வென்ஜெர் ரக பைக் மாடலாக உள்ளது. இந்த நிலையில் தான் தேவை ஏற்பட்டால் டெனெரே 700-ஐ அடிப்படையாக கொண்ட புதிய 300சிசி யமஹா பைக் சந்தையில் அறிமுகமாகுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏனெனில் 300சிசி அட்வென்ஜெர் மோட்டார்சைக்கிள் பிரிவு கடந்த சில வருடங்களாக நல்ல முன்னேற்றத்தை கண்டு வருகிறது. கேடிஎம் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனங்கள் அவற்றின் 390 அட்வென்ஜெர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகள் மூலமாக கணிசமான விற்பனை எண்ணிக்கைகளை பெற்று வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம்.

வாடிக்கையாளர்கள் தேர்வு சிறுக சிறுக இத்தகைய ட்யூல்-ஸ்போர்ட் பைக்குகளின் பக்கம் திரும்பி வருகிறது. மேற்கூறப்பட்ட இரு பைக்குகளும் இந்தியா மட்டுமின்றி மற்ற சர்வதேச சந்தைகளிலும் பிரபலமான பைக்குகளாக உள்ளன.

யமஹா டெனெரே 700-ஐ பற்றி பைக் பிரியர்கள் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். சில நாடுகளில் இந்த 700சிசி பைக் தான் யமஹாவின் அடையாளமாக விளங்குகிறது. ஆனால் யமஹா நிறுவனத்திடம் 300சிசி அட்வென்ஜெர் பிரிவில் தற்போதைக்கு எந்த விற்பனை மாடலும் இல்லை.

இதனாலும் கேடிஎம், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனங்களுக்கு இந்த பிரிவில் கிடைக்கும் வரவேற்பை பார்த்ததினாலும், 300சிசி-ல் புதிய அட்வென்ஜெர் பைக்கை களமிறக்க யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இந்த 300சிசி யமஹா பைக்கின் அறிமுகம் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் கவனம் 300சிசி அட்வென்ஜெர் பைக்குகளின் மீது தொடர்ந்து இருந்தால் மட்டுமே நடைபெறும்.

இதுகுறித்து யமஹா இத்தாலி நிறுவனத்தின் தயாரிப்பு தொடர்பு மேலாளர் ஃபேப்ரிஜியோ கோர்சி,மோட்டோசிக்லிஸ்மோ என்ற செய்திதளத்திற்கு அளித்த பேட்டியில், யமஹா 700 ஐ வழங்கியதுபோது, அதன் வரம்பில் ஏற்கனவே 1200சிசி பைக் இருந்தது. இதன்மூலம் சந்தை என்ன கேட்கும் என்பதில் நாங்கள் கவனத்துடன் இருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

சமீபத்தில், பி.எம்.டபிள்யூ மற்றும் கேடிஎம் போன்ற தயாரிப்புகள் இந்த (300சிசி) பிரிவில் கவனத்தை ஈர்த்துள்ளன. எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கோரிக்கை இருந்தால் அதை பூர்த்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்.

யமஹா டெனெரே 300 தற்போதைக்கு கற்பனை மாடலாகவே உள்ளது. ஒருவேளை இது தயாரிப்பு பணிக்கு வந்தால் இந்த பைக்கில் எம்டி-03 என்ஜின், டெனெரே 700 பைக்கின் அடிப்படையிலான தோற்றத்துடன் வழங்கப்படும். அதேபோல் விலையும் கேடிஎம் 390 அட்வென்ஜெர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் பைக்குகளுக்கு போட்டியளிக்கக்கூடிய விதத்திலேயே நிர்ணயிக்கப்படும்.