இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

இந்திய இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் வகையில், யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்6 மாடல்களின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற யமஹா பைக் மாடல்காக எஃப்இசட் வரிசை உள்ளது.முறுக்கேற்றிய உடல் அமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின் ஆகியவை இந்திய இளைஞர்களை வசியம் செய்து வைத்துள்ளது. இதில், எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய பைக் மாடல்கள் பிஎஸ்6 தரத்திற்கு இணையாக வர இருக்கின்றன.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, இந்த பைக்குகளின் விற்பனைக்கு கொண்டு வரப்படும் திட்டம் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

புதிய யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய பைக் மாடல்களில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர், எல்இடி விளக்குகள், எல்சிடி திரை அமைப்புடன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

இந்த பைக்குகளில் சைடு ஸ்டான்டு போடப்பட்டிருந்தால் எஞ்சின் ஸ்டார்ட் ஆவதை தவிர்க்கும் தொழில்நுட்பம், முரட்டுத்தனமான தோற்றத்தை தரும் வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் கவுல் அமைப்பு ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

இதில் யமஹா எஃப்இசட் 25 பைக்கைவிட சில கூடுதல் அம்சங்கள் எஃப்இசட்எஸ் 25 பைக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. கைகளுக்கு பாதுகப்பு தரும் நக்குள் கார்டுகள், வைசர் அமைப்பு மற்றும் விசேஷ வண்ண அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

யமஹா எஃப்இசட் 25 பைக் மாடலானது மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். எஃப்இசட்எஸ் 25 பைக் மாடல் மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதில், டார்க் சையன் மற்றும் டார்க் புளூ ஆகிய இரண்டு மாடல்களிலும் தங்க வண்ண முலாம் பூச்சுடைய அலாய் வீல்களும், மெட்டாலிக் ஒயிட் வண்ணத் தேர்வில் கருப்பு வண்ண அலாய் வீல்களும் கொடுக்கப்படும்.

யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய இரண்டு பைக் மாடல்கலிலும் ஃப்யூவல் இன்ஜெக்ஷனுடன் இயங்கும் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.6 பிஎச்பி பவரையும், 20.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இளைஞர்களின் மனம் குளிர வைக்கும் விஷயத்தை வெளியிட்ட யமஹா!

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் உள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படும். டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

கேடிஎம் 250 ட்யூக், சுஸுகி ஜிக்ஸெர் 250, ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய பைக் மாடல்களுக்கும், அண்மையில் வந்த பஜாஜ் டோமினார் 250 பைக் மாடலுக்கும் போட்டியாக இருக்கும். பிஎஸ்4 மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZ 25 and FZS 25 BS6 have been teased ahead of its India launch. The company has posted a photo on their official social media channel revealing both the upcoming motorcycles.
Story first published: Tuesday, April 7, 2020, 15:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X