யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யமஹா எஃப்இசட்25 பைக்குகளின் பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய பைக் மாடல்களின் விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்தியாவின் ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் யமஹா எஃப்இசட்25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய பைக் மாடல்கள் முக்கியத் தேர்வாக இருந்து வருகின்றன. இந்த இரண்டு பைக் மாடல்களின் ஸ்டைல் இந்திய இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. இந்தியாவின் 250சிசி பைக் மார்க்கெட்டில் போட்டியாளர்களைவிட குறைவான விலை தேர்வாகவும் இந்த பைக் மாடல்கள் உள்ளன.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், யமஹா எஃப்இசட்25 பைக் மாடலின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பைக் மாடலாக எஃப்இசட்எஸ் 25 பைக் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

அதாவது, எஃப்இசட்எஸ் 25 பைக் மாடலில் கூடுதலாக பெரிய வைசர், கைகளுக்கு பாதுகாப்பை தரும் பிரஷ் கார்டுகள், தங்க வண்ண கோட்டிங் செய்யப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை தனித்துவத்தை கொடுக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்த இரண்டு பைக் மாடல்களின் பிஎஸ்-6 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த நிலையில், தற்போது பிஎஸ்-6 தரத்திற்கு இணையான எஞ்சினுடன் யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 ஆகிய இரண்டு மாடல்களுடன் வந்துள்ளன. இந்த பைக் மாடல்களில் 249 சிசி ஏர்கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.5 பிஎச்பி பவரையும், 20 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் இந்த பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த பைக்குகளில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், டெயில் லைட்டுகள், எஞ்சின் கவுல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சைடு ஸ்டான்டு போடப்பட்டு இருந்தால், எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாத தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யமஹா எஃப்இசட் 25 மற்றும் எஃப்இசட்எஸ் 25 பைக் மாடல்களில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், முன்சக்கரத்தில் 282 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யமஹா எஃப்இசட்25 பைக்கில் ரேஸிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளிலும், எஃப்இசட்எஸ் 25 பைக் மாடலானது டார்க் மேட் புளூ, பேட்டினா க்ரீன் மற்றும் ஒயிட் வெர்மில்லியன் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்-6 மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

யமஹா எஃப்இசட்25 பிஎஸ்6 மாடலுக்கு ரூ.1.52 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையும், எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்-6 மாடலுக்கு ரூ.1.57 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதில், யமஹா எஃப்இசட் 25 பிஎஸ்-6 மாடலின் டெலிவிரி உடனடியாக துவங்கப்பட உள்ளது. ஆனால், எஃப்இசட்எஸ் 25 பிஎஸ்-6 பைக் மாடலின் விலை அறிவிக்கப்பட்டாலும், டெலிவிரிப் பணிகள் இப்போதைக்கு இல்லை என்று யமஹா தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Japanese auto manufacturer Yamaha has launched its BS6 compliant FZ25 in India at a price of Rs 1,52,100, ex-showroom Delhi. The Yamaha FZ25 was unveiled during February this year along with the Yamaha FZS25.
Story first published: Tuesday, July 28, 2020, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X