யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய தொழில்நுட்ப வசதியை யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் எப்போது விற்பனைக்கு வரும், என்ன வசதியைப் புதிதாக பெற்றிருக்கின்றது என்ற தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளும் அடங்கும். அட்டகாசமான தோற்றம், சிறந்த எஞ்ஜின் திறன் மற்றும் அடக்கமான விலை உள்ளிட்ட காரணங்களால் இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இந்த நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக தன்னுடைய வாகனங்களில் புதிய சிறப்பு வசதிகளை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்ய ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், அதிகம் விற்பனையாகும் எஃப்இசட்எஸ் எஃப்ஐ (FZS FI) பைக்கில் புதிய ப்ளூடூத் இணைப்பு தொழில்நுட்ப வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இந்தியாவில் தற்போது பண்டிகைக் காலம் தொடங்கியிருப்பதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகை மற்றும் ஆஃபர்கள் ஆகியவற்றை வாரி வழங்க ஆரம்பித்துள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களை மாற்று வழியில் கவர வேண்டும் என்பதற்காக புதிய தொழில்நுட்ப வசதியை யமஹா அறிமுகம் செய்துள்ளது.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

யமஹா நிறுவனத்திற்கு முன்னதாக இதே தொழில்நுட்ப வசதியுடன் அக்செஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகிய இரு ஸ்கூட்டர்களை சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதையடுத்து மோட்டார்சைக்கிள்களிலும் இந்த வசதியை வழங்க திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே யமஹா நிறுவனம் எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற உதவும் என நம்பப்படுகின்றது.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ டார்க் க்நைட் பிஎஸ்-VI பைக்கில் மட்டுமே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுவே, ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் யமஹா அறிமுகப்படுத்தும் இந்தியாவிற்கான முதல் பைக்காகும். விரைவில், இந்த வசதியை எஃப்இசட் எஃப்ஐ மற்றும் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ 150சிசி பைக்குகளிலும் யமஹா அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இதற்காக, கன்னெக்ட் எக்ஸ் எனும் செல்போன் செயலியையும் யமஹா அறிமுகம் செய்திருக்கின்றது. இதைக் கொண்டே பைக்கையும், செல்போனையும் இணைக்க முடியும். அவ்வாறு, இணைக்கும் பட்சத்தில் எண்ணற்ற வசதிகளை பைக்கின் உரிமையாளரால் பெற முடியும். குறிப்பாக, நேவிகேஷன், இ-லாக், பைக் இருக்கும் இடத்தை அறிதல், ரைட் வரலாறு, பார்க்கிங் வரலாறு மற்றும் அழைப்புகளை ஏற்தல் உள்ளிட்ட பயன்பாட்டைப் பெற முடியும்.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இந்த சிறப்பு வசதிகளைக் கொண்ட எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கையே யமஹா நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் வருகின்ற நவம்பர் 1ம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது. இதற்கு ரூ. 1,07,700 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த சிறப்பு வசதியையும், புதிய பைக்கின் இயங்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை யமாஹ வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

புதிய இணைப்பு வசதியில் வழங்கப்பட்டிருக்கும் இ-லாக் தொழில்நுட்பம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இது திருட்டைத் தடுக்கும் நோக்கில் யமஹா வழங்கியிருக்கின்றது. இதன் மூலம் பைக் எங்கு இருக்கின்றது?, எந்த இடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது?, என்ற அனைத்து தகவலையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் 10 செகண்டுகளுக்கு பைக் அனைத்து இன்டிகேட்டர்களையும் எரிய செய்யும். இத்துடன், ஹாரனையும் ஒலித்து காட்டும். இதன் மூலம், பைக் மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இதுபோன்று பல்வேறு தகவல்களை வழங்கக்கூடிய மோட்டார்சைக்கிளாக புதிய யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக் இருக்கின்றது.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இந்த பைக்கில் யமஹா நிறுவனம் 149 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு எஞ்ஜினைப் பயன்படுத்தியிருக்கின்றது. இதே எஞ்ஜின்தான் எஃப்இசட் எஃப்ஐ மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 12.4 எச்பி பவரை 7,250 ஆர்பிஎம்மிலும், 13.6 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இந்த திறன் பிஎஸ்4 வாகனங்களைக் காட்டிலும் சற்று குறைவானதாகும்.

யமஹா எஃப்இசட்எஸ் எஃப்ஐ பைக்கில் புதிய வசதி அறிமுகம்... பொறாமையில் பழைய பைக் உரிமையாளர்கள்...

இப்பைக்கில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு வசதிக்காக முன்பக்க வீலில் ஏபிஎஸ் பிரேக்குடன் கூடிய டிஸ்க் பிரேக்கும், பின் பக்க வீலில் டிரம் பிரேக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளன. இதே பாதுகாப்பு வசதியைதான் எஃப்இசட் எஃப்ஐ பைக்கிலும் காணப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha FZS FI Gets Bluetooth Connectivity. Read In Tamil.
Story first published: Saturday, October 17, 2020, 11:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X