அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

அமேசான் மற்றும் யமஹா ஆகிய இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக இந்த கூட்டணி என்பதுபற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

ஆன்லைன் வர்த்தக உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக செயல்பட்டு வருகின்றது அமேசான் நிறுவனம். இந்நிறுவனத்துடன் பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனங்களை டூர் டெலிவரி செய்ய இந்த நிறுவனத்துடன் இணைந்திருக்கின்றதோ என நம்மில் கேள்வி முன்வைத்திருக்கலாம்.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

ஆனால், அதற்காக இரு நிறுவனங்களும் தற்போது கூட்டணி வைக்கவில்லை. வேறு எதற்காக இந்த புதிய கூட்டணி?, யமஹா நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோன்று, இந்நிறுவனம் ரைடர்களுக்கு தேவையான ஆடைகள் மற்றும் அணிகலன்களையும் விற்பனைச் செய்து வருகின்றது.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

இதனை வாடிக்கையாளர்களிடம் எளிதில் கொண்டுபோய் சேர்க்கும் என்பதற்காகவே அமேசானுடன் யமஹா கூட்டணி வைத்திருக்கின்றது. அதாவது, அமேசான் ஆன்லைன் வர்த்தக தளத்தின் வாயிலாக தனது அனைத்து ஆபரணங்கள் மற்றும் ஆடைகளையும் யமஹா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்காக தற்போது இரு நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

ஆன்லைன் வர்த்தகத்தின் மகுடம் சூட்டப்படாத ராஜாவாக அமேசான் இருக்கின்றது. இதற்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் பயனர்கள் இருக்கின்றனர். இந்த நிலை தன்னுடைய பொருட்களின் வர்த்தகத்திற்கு உதவும் என யமஹா நம்புகின்றது. இதனடிப்படையிலேயே அமேசானுடன் அது தற்து கூட்டு வைத்திருக்கின்றது.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

இந்த கூட்டணியின் அடிப்படையில் டி-சர்ட், ஜாக்கெட், ரைடிங் குளோவ்ஸ், கேப்ஸ் மற்றும் போலோ டி-சர்ட்டுகள் உள்ளிட்ட யமஹாவின் பல்வேறு அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர, இருசக்கர வாகனங்களுக்கு தேவையான அக்ஸசெரீஸ்கள் சிலவும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

இதன்படி, அமேசான் ஆன்லைன் வர்த்தக தளத்தில் டேங்க் பேட்கள், பைக் கவர், சீட் கவர், யுஎஸ்பி மொபைல் சார்ஜர், எஞ்ஜின் குவார்ட், ஸ்கிட் பிளேட், ஃபிரேம் ஸ்லைடர் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு தேவையான அணிகலன்கள் உள்ளிட்டவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

தொடர்ந்து, யமஹா லோகோக்கள் பொருந்திய ஸ்டிக்கர் மற்றும் கீ செயின்களும் அமேசானில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் தற்போதும் தீவிரமாக தன்மையுடன் காட்சியளிக்கின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் நேரடியாக சென்று பொருட்களை வாங்குவதைக் காட்டிலும், ஆன்லைன் மூலமாகவே வாங்குவதிலேயே அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

மேலும், அலைச்சல் இன்றி பொருட்களையும் வீடு தேடி வரவழைக்க முடியும். இதுமாதிரியான பல்வேறு காரணங்களால் அண்மைக் காலங்களாக ஆன்லைன் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டும் யமஹா நிறுவனம் அமோசானுடன் இணைந்திருக்கின்றது.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

இதுதவிர, தன்னுடைய தயாரிப்புகள் எளிதில் வாடிக்கையாளர்களைச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கிலும் யமஹா-அமேசான் கூட்டணி தொடங்கப்பட்டிருப்பதாக அதன் நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்து, யமஹா மோட்டார் இந்தியா குழுமத்தின் தலைவர் மோட்டோஃபூமி ஷிதாரா கூறியதாவது, "இணையத்தின் வாயிலாக பொருட்களை விற்பனைக்குக் கொண்டுவந்ததன் மூலம் பன்மடங்கு வாடிக்கையாளர்களைக் கவர முடியும். இது யமஹா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி பிறரையும் கவர உதவும்" என கூறினார்.

அமேசானுடன் கூட்டு சேர்ந்த யமஹா... எதற்காக இந்த கூட்டணி, இதன் மூலம் என்ன செய்ய போறாங்கனு தெரியுமா?

இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் யமஹா நிறுவனம் பல்வேறு தனித்துவமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையிலேயே அமேசான் இணைப்பு பார்க்கப்படுகின்றது. இது யமஹா நிறுவனத்திற்கு நல்ல பலனை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்த புதிய விளையாட்டில் யமஹா வெற்றி பெறுகின்றதா, இல்லையா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Joins With Amazon For Seamless Delivery Apparels & Accessories. Read In Tamil.
Story first published: Sunday, November 1, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X