யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் அறிமுகம்... இந்தியா வர வாய்ப்பு!

யமஹாவின் புதிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பற்றிய தகவல்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. சாதாரண ஸ்கூட்டர்களை தாண்டி இப்போது அதிக சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் பிரம்மாண்டமான தோற்றம் கொண்ட மேக்ஸி எனப்படும் பெரிய வகை ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்தநிலையில், ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் தனது தாயகத்தில் மெஜெஸ்ட்டி எஸ் என்ற புதிய மேக்ஸி ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுடன் அங்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த ஸ்கூட்டர் இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

ஏனெனில், இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட்டில் யமஹா நிறுவனமும் மிக முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறது. அத்துடன், வழக்கமான டிசைன் அம்சங்களில் இருந்து மாறுபட்ட டிசைன் கொண்ட ஸ்கூட்டர்களையும் இந்நிறுவனம் விற்பனை செய்வதால், இளசுகள் மத்தியில் யமஹா ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்த வகையில், இந்த மெஜெஸ்ட்டி எஸ் ஸ்கூட்டரையும் இந்தியாவில் யமஹா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு சிறப்பாக இருந்து வருகிறது.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

யமஹா மெஜெஸ்ட்டி எஸ் ஸ்கூட்டர் முகப்பு மிக பிரம்மாண்டமான அப்ரான் பகுதியுடன் மிக கவர்ச்சிகரமாக உள்ளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்கு பட்டை ஆகியவையும் இதற்கு சிறப்பு சேர்க்கின்றது. எல்இடி டெயில் லைட்டுகள், பின்புறத்தில் வசீகரத்தை தரும் வகையிலான கிராப் ரெயில் கைப்பிடி ஆகியவையும் உள்ளன.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்த ஸ்கூட்டரில் அனலாக் மீட்டர் மற்றும் டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் போதுமான இடவசதி, உயர்தர ஊக்குகள், முழுமையான ஹெல்மெட் வைப்பதற்கான பெரிய ஸ்டோரேஜ் இடவசதி, முன்புறத்தில் வாட்டர் பாட்டில் வைப்பதற்கு வசதியாக ஃப்ரண்ட் பாக்கெட் ஆகியவையும் உள்ளன.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

யமஹா மெஜெஸ்ட்டி எஸ் ஸ்கூட்டரில் முன்புறத்தில் 267 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்த சக்திவாய்ந்த ஸ்கூட்டருக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும்.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்த ஸ்கூட்டரில் 155சிசி எஞ்சின் உள்ளது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட இந்த எஞ்சின் 15 பிஎஸ் பவரையும், 14 என்எம் டார்க் திறனையும் வழங்கும். லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், வரும் பண்டிகை காலத்தில் எதிர்பார்க்கப்படும் ஏப்ரிலியா 160 எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும். ஆனால், யமஹா மெஜெஸ்ட்டி அதிக சக்திவாய்ந்த ஸ்கூட்டர் தேர்வாக இருக்கும்.

யமஹாவின் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் இந்தியா வர வாய்ப்பு!

ஜப்பானை தவிர்த்து, பிலிப்பைன்ஸ், மலேசியாவில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இந்தியாவில் இந்த புதிய மேக்ஸி ஸ்கூட்டரை கொண்டு வருவதற்கு யமஹா பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha has unveiled all-new Majesty S 155 maxi styled scooter in Japan.
Story first published: Tuesday, March 24, 2020, 11:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X