யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

யமஹா மோட்டார்ஸின் பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரம் வெளிவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக உள்ள யமஹா கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 60,176 தயாரிப்பு மாடல்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2019 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும்.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

ஏனெனில் அந்த மாதத்தில் 46,082 யூனிட் இருசக்கர வாகனங்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இவ்வாறு கடந்த வருட ஒத்த மாதத்துடன் ஒப்பிடுகையில் யமஹா நிறுவனம் கடந்த 4 மாதங்களாக தொடர்ச்சியாக விற்பனையில் வளர்ச்சியை கண்டு வருகிறது.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

2019 ஜூலையை காட்டிலும் 2020 ஜூலையில் 4.3 சதவீத வளர்ச்சியை பெற்ற யமஹா, 2020 ஆகஸ்ட்டில் 14.8 சதவீதமும், 2020 செப்டம்பரில் 17 சதவீதமும் விற்பனையில் வளர்ச்சியை எட்டியுள்ளது.

Month 2019 Domestic 2020 Domestic Growth (%)
July 47918 49989 4.3
August 52706 60505 14.8
September 53727 63052 17
October 46082 60176 31
யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த இரு மாதங்களாக தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு இந்நிறுவனம் இவ்வாறு விற்பனையில் முன்னேற்றத்தை கண்டு வருவது உண்மையில் ஆச்சிரியப்படுத்தும் விஷயமாகும்.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

இருப்பினும் முந்தைய செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த அக்டோபர் மாதத்தில் 2,876 யூனிட்கள் அளவில் குறைவான விற்பனை எண்ணிக்கையையே யமஹா சந்தையில் பதிவு செய்துள்ளது. இந்த சிறிய சரிவை மனதில் வைத்தும், வரப்போகும் பண்டிகை காலத்தை மனதில் வைத்தும் அட்டகாசமான சலுகைகளை யமஹா நிறுவனம் அதன் தயாரிப்புகளுக்கு அறிவித்துள்ளது.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

இந்த நிதி சலுகைகளில் குறைந்த கட்டணம் செலுத்தும் விருப்பங்கள், குறைந்த இஎம்ஐ திட்டங்கள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இந்த சலுகைகள் புதிய வாகனம் வாங்குவதற்குத் தேவையான முன்தொகையை குறைக்க உதவும் மற்றும் தற்போதைய பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.

யமஹா பைக்குகளின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து அதிகரிப்பு!! முழு விபரம் உள்ளே

யமஹா மோட்டார் இந்தியா, கடந்த ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கணிசமான வளர்ச்சியைத் தொடர்கிறது. நடப்பு பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்றும் நிறுவனம் நம்புகிறது. கூடுதலாக, இது நாட்டில் விற்பனையை அதிகரிக்க கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் அறிவிக்க உதவும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Bike Sales Report For October 2020 In India: Yamaha Motors Posts 31% Growth
Story first published: Wednesday, November 4, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X