மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

2021 ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசனை பற்றிய சில விபரங்களை தயாரிப்பு நிறுவனமான யமஹா வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சர்வதேச சந்தைகளில் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3 பைக்கின் விலை 5,599 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4.13 லட்சமாகும்.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

இதன் புதிய மோட்டோஜிபி எடிசன், யமஹா ஒய்இசட்ஆர்-எம்1 பைக்கை போன்று கருப்பு மற்றும் நீல நிற ஷேட்களுடன் பெயிண்ட் அமைப்பை பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் மான்ஸ்டர் எனர்ஜி முத்திரை மற்றும் ENEOS என்ற ஸ்டிக்கர் உடன் பைக் மொத்தமும் ஸ்பெஷல் உடையினை ஏற்றுள்ளது.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

மற்றப்படி இந்த தோற்ற மாறுபாடுகளை தவிர்த்து இயந்திர பாகங்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் வழக்கமான ஒய்இசட்எஃப்-ஆர்3-ஐ தான் ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதே 321சிசி, இன்லைன் இரட்டை-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜினை தான் இந்த மோட்டோஜிபி எடிசன் பைக்கிலும் யமஹா நிறுவனம் பொருத்தியுள்ளது.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஒய்இசட்எஃப்-ஆர்3 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோஜிபி எடிசனில் முக்கிய அம்சங்களாக இரட்டை-பேட் ஹெட்லைட், ஹெட்லைட்டிற்கு மேற்புறத்தில் பின்பக்கம் பார்க்கும் கண்ணாடி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிளவுப்பட்ட ஸ்டைலில் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

சஸ்பென்ஷன் அமைப்பாக வழக்கம்போல் இந்த மோட்டோஜிபி எடிசன் பைக்கிலும் முன்புறத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ-ஷாக்கும் தான் வழங்கப்பட்டுள்ளன. ப்ரேக்கிங் பணியை கவனிக்க ட்யூல்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் சக்கரத்தில் 298மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 220மிமீ-ல் ரோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளன.

மோட்டோஜிபி உடையுடன் 2021 யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்3... முக்கிய விபரங்கள் வெளிவந்தன...

ஒய்இசட்எஃப்-ஆர்3 மட்டுமின்றி ஒய்இசட்எஃப்-ஆர்1 பைக்கின் ஸ்பெஷல் எடிசனையும் பெட்ரோனாஸ் எடிசன் என்ற பெயரில் யமஹா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. பெட்ரோனாஸ் என்பது யமஹாவின் செயற்கைக்கோள் குழுவாகும். இதன் 46 வருட பயணத்தை கொண்டாடும் விதமாக யமஹா இந்த ஸ்பெஷல் எடிசனை கொண்டுவந்திருந்தது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
2021 Yamaha YZF-R3 Monster Energy MotoGP Edition Revealed
Story first published: Wednesday, September 9, 2020, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X