ஆர்வத்தை எகிற செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

புத்தம் புதிய ஸ்டைல் மற்றும் வசதிகளுடன் யமஹா எம்டி-09 வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் பற்றிய சிறப்பு தகவல்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

யமஹா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் நிலவுவதைப் போலவே உலக நாடுகள் சிலவற்றிலும் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. எனவேதான் உலக புகழ்வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை இது பெற்றிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், அதன் பிரபலமான எம்டி இருசக்கர வாகன பிரிவில் புதிதாக எம்டி-09 எனும் அப்கிரேட் செய்யப்பட்ட புதுமுக பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

இது 2021ம் ஆண்டிற்கான மாடல் ஆகும். இன்னும் சில மாதங்களில் இந்த பைக் விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தின் பக்கம் மக்களை ஈர்க்கும் நோக்கில் புதிய யமஹா எம்டி-09 பைக்கின் புகைப்படத்தை யமஹா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. யமஹா எம்டி-09 ஓர் நேக்கட் ஸ்ட்ரீட்-ஃபைட்டர் ரக பைக்காகும்.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

கடுமையான மாற்றியமைக்கப்பட்ட மாடலாக தற்போது யமஹா எம்டி-09 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முன்பைக் காட்டிலும் மிகவும் துடிப்பான மற்றும் மிக ஷார்ப்பான தோற்றம் மற்றும் அதிக பவர்ஃபுல் எஞ்ஜினுடன் இப்பைக் களமிறங்க இருக்கின்றது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கருத்தில் பைக்கின் அப்கிரேஷன் அமைந்துள்ளது.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

புதிய அப்கிரேஷனில் பழைய எம்டி09 பைக்கின் உருவம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதலில் முகப்பு பகுதியில் என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது என பார்க்கலாம். டிஆர்எல்-களுடன் கூடிய எல்இடி மின் விளக்கு ஹெட்லேம்பாக பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக ட்வின் பீம் மின் விளக்கே இங்கு காணப்பட்டது. இதுதான் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

மேலும், முன்பைக் காட்டிலும் தற்போது சிறப்பான ஏரோடைனமிக் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் திறனை எம்டி09 கூடுதலாகப் பெற்றிருக்கின்றது. இந்த சிறப்பான உருவ அமைப்பிற்காக பெட்ரோல் டேங்கின்மீது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பேனல்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று வால்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகளிலும் சிறப்பு பேனல்கள் புதிதாக நிறுவப்பட்டிருக்கின்றன.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

இதேபோன்று, புதிய தொழில்நுட்ப வசதிகள் சிலவும் இந்த பைக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், அதிக கவனத்தை ஈர்க்க கூடிய ஓர் அம்சமாக டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. இதில் கியர் மாற்றும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் யமஹாவின் ஒய்இசட்எஃப்-ஆர்1 பைக்கில் இடம்பெற்றிருப்பதைப் போன்று ஆறு ஆக்ஸில்கள் கொண்ட ஐஎம்யூ-வே (inertial measurement unit) பொருத்தப்பட்டிருக்கின்றது.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

இதைத்தொடர்ந்து, டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், கார்னரிங் ஏபிஎஸ், ஸ்லைடு கன்ட்ரோல் மற்றும் வீலி கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், புதிய தோற்றம் மற்றும் ஸ்டைலுக்காக பைக்கின் ஃபிரேமும் மாற்றப்பட்டிருக்கின்றது. முக்கோணபாக்ஸ் வடிவத்திற்கு ஒத்த ஃபிரேமே தற்போது பைக்கில் இடம்பெற்றிருக்கின்றது.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

இது முன்பு பைக்கில் இடம்பெற்றிருந்ததைக் காட்டிலும் எடைக் குறைந்த ஃபிரேம் என கூறப்படுகின்றது. இப்பைக்கின் ஒட்டுமொத்த எடை 189 கிலோவாகும். இந்த பைக்கை அடுத்த ஆண்டு உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவிருக்கின்றது. முதலில் ஐரோப்பி இருசக்கர வாகன சந்தையில் யமஹா எம்டி09 களமிறக்கப்பட இருக்கின்றது. இதன் பின்னரே உலக சந்தையில் இது விற்பனைக்கு வரும்.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

அந்தவகையில், புதிய அப்டேட் செய்யப்பட்ட யமஹா எம்டி-09 விற்பனைக்கு வருவது 2021 அல்லது 2022-ம் ஆம் ஆண்டில் அரங்கேறலாம் என கூறப்படுகின்றது. இப்பைக்கில், 889 சிசி திறன் கொண்ட எஞ்ஜினையே யமஹா பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 118 பிஎச்பி மற்றும் 93 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், இது பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் ஆகும்.

ஆர்வத்தை எகிர செய்யும் அட்டகாசமான வடிவமைப்பில் புதிய யமஹா எம்டி-09... எப்போ அறிமுகம் தெரியுமா?..

யமஹா நிறுவனம் அண்மையில் அதன் எஃப்இசட்எஸ்-எஃப்ஐ பைக்கில் இணைப்பு வசதியை புதிதாக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதியைப் பெறும் முதல் பைக்க இதுவேவாகும். இந்தியாவில் விழாக் காலம் நெருங்கி வருவதை முன்னிட்டு பிற வாகன நிறுவனங்கள் சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடியை வழங்கி வருகின்றநிலையில், யமஹா இணைப்பு வசதியுடன் பைக்கை அறிமுகப்படுத்தியது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Revealed All-New MT-09 Official Pictures. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X