உங்கள் புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

உங்களுக்கு தேவையான நிறத்தை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம் பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த வசதி குறிப்பிட்ட ஒரு மாடலுக்கு மட்டுமே பொருந்தும். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

யமஹா நிறுவனத்தின் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் எம்டி-15 பைக்கும் ஒன்று. இந்த இருசக்கர வாகனத்தின் பக்கம் இளைஞர்களைக் கவர்வதற்கு சிறப்பு ஆப்ஷன் ஒன்றை அது அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தைத் தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என அது கூறியுள்ளது.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

இதன்மூலம் புதிதாக எம்டி-15 பைக்கை வாங்கும் வாடிக்கையாளர்கள், பைக்கின் எந்த பாகம் எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்து, மாற்றிக் கொள்ளலாம். இந்தியர்களுக்காக பிரத்யேகமாக இத்திட்டத்தை யமஹா அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை யமஹா நிறுவனம் வெள்ளிக்கிழமை (20 நவம்பர்) வெளியிட்டது.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

அண்மையில் அறிமுகமான ஐஸ் ஃப்ளூவோ-வெர்மில்லியன் நிற எம்டி-15 மாடலுக்கு தற்போது கிடைத்து வரும் நல்ல கருத்து நிலவுவதன் அடிப்படையில் இந்த சிறப்பு ஆப்ஷனை யமஹா அறிமுகப்படுத்தியள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் பன் நிற மோகத்தைத் தீர்க்கு வைக்க இந்த புதிய வசதி உதவும் என நம்பப்படுகின்றது.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

2021 ஜனவரி முதல் இந்த நிற விருப்ப தேர்வினை புதிய எம்டி15 வாடிக்கையாளர்களால் பெற முடியும். இதற்காக 11 நிறங்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எந்த நிறத்தை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது கிடைக்கக்கூடிய மொத்த வண்ண விருப்பங்களின் எண்ணிக்கை 14 ஆக இருக்கின்றது.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

இதில், மூன்று நிறங்கள் மட்டும் வாங்கப்பட்ட (புக்கிங் செய்த) உடன் உடனடியாக கிடைக்கும் வகையில் வசதி வாய்ப்பு செய்யப்பட்டிருக்கின்றது. புதிய நிற தேர்வு அறிமுகம் பற்றிய யமஹா நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைவர் மோட்டோபூமி ஷிதாரா கூறியதாவது, "இன்றைய தலைமுறையினர் பன்முக நிறத் தேர்வு மற்றும் வெரைட்டிகளை விரும்புகின்றனர். இவர்களின் தேடலை பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

புதிய பைக்கிற்கான நிறத்தை நீங்களே தேர்வு செய்யலாம்... சிறப்பு வசதியை வழங்கும் பிரபல நிறுவனம்!

யமஹா எம்டி15 பைக்கில் 155சிசி திறன் கொண்ட ப்யூவல் இன்ஜெக்டடர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விவிஏ தொழில்நுட்பத்தில் இயங்கும். இளைஞர்களின் தேவைக்கேற்ப சீறி பாய்ந்து செல்லும் திறன் கொண்ட பைக் இதுவாகும். இதில், அதிக பாதுகாப்பு வசதியாக ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Specially Announces Colour Customization Option For MT-15 Bike In India. Here Is The Full Details. Read In Tamil.
Story first published: Friday, November 20, 2020, 18:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X