இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது... நமக்கு கொடுத்து வைக்கல! புகைப்படத்தையாவது பாத்துக்கலாம்!

யமஹா நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பற்றிய சிறப்பு தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

யமஹா நிறுவனம் மிக அண்மையில் வினூரா எனும் உலகின் மிக அழகான ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நியூரோ-ரெட்ரோ ரகத்திலான ஸ்கூட்டர்களுக்கு அதிகமான வரவேற்பு நிலவி வருவதைத் தொடரந்து யமஹா நிறுவனம் இந்த ஸ்கூட்டரை முதல் முறையாக தாய்வானில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இந்நிலையில், தற்போது மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் ஓர் புதிய ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவே யமஹா அறிமுகம் செய்திருக்கும் மிகவும் முரட்டுத் தனமான முதல் ஸ்கூட்டராகும். இதற்கு பிடபிள்யூஎஸ் 125 என்ற பெயரை அது வைத்திருக்கின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

அட்வென்சர் பைக்குகளுக்கு இணையான திறனில் இந்த ஸ்கூட்டரை யமஹா உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வியட்நாமின் அட்வென்சர் இருசக்கர வாகனச் சந்தையில் நுழையும் விதமாக இந்த ஸ்கூட்டரை யமஹா தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், வியட்நாமிகளுக்காகவே ஸ்பெஷலாக இந்த ஸ்கூட்டரை யமஹா உறுவாக்கியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

உருவம், சஸ்பென்ஷன் மற்றும் டயர் என அனைத்துமே ஆஃப்-ரோடு சாகச பயணத்திற்கு ஏற்ற தரத்தில் இந்த ஸ்கூட்டரில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், வியட்நாமிகளை வெகுவாக இது கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வியட்நாமின் ஆஃப்-ரோடு பயண பிரியர்களை அதிகளவில் ஈர்க்கும் என யூகிக்கப்படுகின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் ஆஃப்-ரோடு பயண பிரியர்களைக் கவரும் வகையில் இரு வட்ட வடிவ மின் விளக்குகள், கவர்ச்சியான உருவம், பெரியளவிலான பாடி பேனல்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டு திறன் கொண்ட டயர்கள் (ஆஃப் மற்றும் ஆன் ரோடு பயணத்திற்கு ஏற்றது) உள்ளிட்டவற்றை பிடபிள்யூஎஸ் 125 பெற்றிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இதுதவிர, எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் பாதுகாப்பைக் கூட்டக்கூடிய உலோக பார்கள் உள்ளிட்டவற்றையும் யமஹா இந்த அட்வென்சர் ஸ்கூட்டரில் நிலை நிறுத்தியுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரில் என்னமாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இருப்பினும், ப்ளூடூத் இணைப்பு போன்ற சிறப்பு தொழில்நுட்பங்கள் இதில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த ஸ்கூட்டரில் சிறந்த திறனை வெளிப்படுத்தும் வகையில் 125சிசி பவர் கொண்ட சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு-கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இதே திறனுடைய எஞ்ஜினையே அண்மையில் தாய்லாந்தில் அறிமுகம் செய்த வினூரா ஸ்கூட்டரில் யமஹா பயன்படுத்துகின்றது. இதுதவிர, ஃபஸினோ 125, ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ரேலி 125 எஃப்ஐ மற்றும் ராலி இசட்ஆர்125 எஃப்ஐ ஆகிய மாடல்களிலும் இதே எஞ்ஜினைதான் யமஹா பயன்படுத்தி வருகின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

ஆகையால், இந்த ஸ்கூட்டர்களைப் போலவே அதிகபட்சமாக 55க்கும் அதிகமான மைலேஜ் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை யமஹா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதேபோன்று, இந்த எஞ்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பற்றிய எந்த தகவலையும் யமஹா வெளியிடவில்லை. இருப்பினும், மேற்கூறிய ஸ்கூட்டர்களுக்கு இணையான திறனை புதிய பிடபிள்யூஎஸ் 125 வெளியேற்றலாம் என யூகிக்கப்படுகின்றது.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இந்த ஸ்கூட்டரில் சிவிடி திறனுடைய கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அரக்கனைப் போல் காட்சியளிக்கும் இந்த ஸ்கூட்டரின் இந்த தோற்றத்தை கூடுதலாக பிரதிபலிக்கம் வகையில் 12 இன்ச் அளவுள்ள வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது, ஆஃப்-ரோடு பயன்பாட்டின்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இதற்கேற்பவே டிஸ்க் பிரேக் மற்றும் சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்கூட்டரின் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஸ்டாண்டர்டு சிறப்பு வசதியாக யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட கூடுதல் ஸ்பெஷல் அம்சமங்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஸ்கூட்டர் இந்தியர்களுக்கு கிடையாது! நாம கொடுத்து வச்சது அவ்ளோதான் புகைப்படத்தையாவது பார்த்து ஆசைய தீத்துப்போம்...

இந்த ஸ்கூட்டர் வெளியேற்றும் திறன் பற்றிய தகவலை மறைத்திருப்பதைப் போலவே இதன் விலையையும் இன்னும் யமஹா அறிவிக்கவில்லை. இதில் பிரீமியம் மற்றும் சிறப்பு வசதிகள் பல இடம்பெற்றிருப்பதால் சற்று கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரை வியட்நாம் சந்தைக்காக சிறப்பாக உருவாக்கியிருப்பதால், இதன் இந்திய அறிமுகம் கேள்விக் குறியே. முன்னதாக, அறிமுகம் செய்யப்பட்ட க்யூட்டான வினூர ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாவதும் சந்தேகம் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த இரு ஸ்கூட்டர்கள் விஷயத்திலும் யமஹா இந்தியர்களை ஏமாற்றியிருக்கின்றதே என்ற கருதலாம்.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Unveiled New BWS 125 Scooter In Vietnam. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X