"இது யமஹா ஸ்கூட்டர்தான், ஆனா ஃபஸ்ஸினோ இல்ல"... 2021இல் விற்பனைக்கு வரபோகுதாம்... இதோ முழு விபரம்!

அடுத்த வருடம் விற்பனைக்கு வரவிருக்கும் புதுமுக ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் தற்போது உலகளவில் வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

நடப்பு 2020 வருடம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கின்றது. இந்த வருடத்தைபோல் வரும் இருக்காது என நம்பப்படுகின்றது. குறிப்பாக, தற்போது நிலவி வரும் கொரோனா வைரசால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் முழுமையாகக் குறையும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இதே நம்பிக்கையைதான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும் கொண்டிருக்கின்றன.

இதன் அடிப்படையில், அடுத்த ஆண்டிற்கான வாகனங்களை அவை அறிமுகம் செய்யத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில், உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான யமஹா, 2021ம் ஆண்டிற்கான புதிய மாடல் ஒன்றை உலகளவில் வெளியீடு செய்துள்ளது.

இது ஓர் பிரீமியம் ரக ஸ்கூட்டராகும். தற்போது விற்பனையில் இருக்கும் யமஹா ஃபஸ்ஸினோ 125 எஃப்ஐ மாடலைத் தழுவிய ஸ்டைலில் புதிய ஸ்கூட்டரின் தோற்றம் இருக்கின்றது. இதற்கு டி'எலைட் 125 எனும் பெயரை ஸமஹா வைத்திருக்கின்றது. இதன் ஸ்டைல் ஃபஸ்ஸினோவைப் போல் தென்பட்டாலும், இதில் இருக்கும் எஞ்ஜின் மற்றும் பிற கூறுகள் சில யமஹா மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் இடம் பெற்றிருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது.

இத்துடன், இந்த ஸ்கூட்டரில் புதிய வசதியாக நடுத்தரமான டிஜிட்டல் திறன் கொண்ட எல்சிடி அனலாக் ஸ்பீடோ மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறிய திரை பெட்ரோல் அளவு உள்ளிட்ட பிற தகவல்களை வழங்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்கூட்டர்களில் இல்லாத வகையிலான புதிய ஸ்டைலிலான ஹெட்லைட், இன்டிகேட்டர் மற்றும் ஹார்ன் உள்ளிட்டவற்றிற்கான பொத்தான்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில வெஸ்பா ஸ்கூட்டர்களில் இருப்பதைப் போன்று தென்படுகின்றது.

யமஹா நிறுவனம், டி'எலைட் 125 பைக்கில் 125சிசி திறனை வெளிப்படுத்தக்கூடிய சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினைப் பயன்படுத்தியுள்ளது. இது, அதிகபட்சமாக 8.4 பிஎஸ் மற்றும் 9.8 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றிருந்தாலும், இதன் எடை வெறும் 101 கிலோவாக மட்டுமே இருக்கின்றது.

ஆமாங்க, தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த எடையுள்ள ஸ்கூட்டராக இது விற்பனைக்கு வரவிருக்கின்றது. ஆனால், 2021ம் ஆண்டில்தான் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இந்திய அறிமுகம் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை எதிர்பார்க்கலாம்.

யமஹாவின் ஃபஸ்ஸினோ ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதன் மாடலை ஒத்தவாறு டி'எலைட் இருப்பதால் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு யமஹா நிறுவனம் இந்த புதுமுக ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
Yamaha Unveils 2021 D’elight Scooter With Refreshed Design & A New Engine. Read In Tamil.
Story first published: Friday, November 27, 2020, 16:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X