இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

மிக அழகான தோற்றத்தில் யமஹா நிறுவனம் புதிய நியோ-ரெட்ரோ ஸ்கூட்டரை வினோரா என்ற பெயரில் தைவானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டரை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

நியோ-ரெட்ரோ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஐரோப்பாவில் இருந்து ஜப்பான் வரையில் பெரும்பான்மையான பிராண்ட்கள் அனைத்தும் நியோ-ரெட்ரோ ஸ்கூட்டர் ரேஞ்ச்சை கொண்டுள்ளன.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

இந்த வகையில் தான் யமஹா நிறுவனம் வினோரா என்ற புதிய நியோ-ரெட்ரோ ஸ்கூட்டரை தைவானில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தோற்றத்தில் அழகானது என்று மட்டும் சொல்ல முடியாது, ஏனெனில் அதேநேரம் வேகமாகவும் யமஹா வினோரா இயங்கக்கூடியது.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

நிறுவனத்தின் நியூட்ரோ டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் எளிமையான & தெளிவான லைன்கள் மற்றும் நீள்வட்ட பாகங்களை கொண்டுள்ளது. முன்பக்கம் மினியன்ஸ் ஹாலிவுட் படத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம். அப்படியே கீழறங்கி ஸ்கூட்டரின் முன்புறத்தை பார்த்தால் ஹோமர் சிம்ப்சன் என்ற ஆங்கில அனிமேஷன் கார்டூன் உங்களது நினைவிற்கு வரலாம்.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

மொத்த ஸ்கூட்டரும் பழமையான தோற்றத்தில் இருந்தாலும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லேம்ப் அமைப்புகள் நவீன தரத்தில் எல்இடி விளக்குகளை கொண்டுள்ளன. இருப்பினும் இண்டிகேட்டர்கள் ஹலோஜன் தரத்தில் தான் வழங்கப்பட்டுள்ளன.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

கண்ணை கவரும் தோற்றத்தில் உள்ள இந்த யமஹா ஸ்கூட்டரில் 125சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு மற்றும் ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த எந்த தகவலையும் யமஹா நிறுவனம் வெளியிடவில்லை.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

பிஎஸ்6 யமஹா ஃபாஸினோ 125, ரே-இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் மற்றும் ராலி-இசட்ஆர் 125 ஃப்யுல்-இன்ஜெக்டட் ஸ்கூட்டர்களில் பொருத்தப்படுகின்ற 125சிசி என்ஜின் தான் இந்த ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய வினோராவும் அவற்றை போல் 57.7 kmpl மைலேஜை வழங்கலாம்.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

ப்ரேக்கிங் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் டிஸ்க்கும் பின் சக்கரத்தில் ட்ரம்-மும் பொருத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்புறத்தில் மோனோஷாக்கும் உள்ளன. வினோராவின் எடையும் குறைவே, வெறும் 94 கிலோ தான்.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

தொழிற்நுட்ப அம்சங்களாக முழு டிஜிட்டலில் கன்சோல், யுஎஸ்பி சார்ஜிங் துளை, யமஹாவின் ஸ்மார்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் யமஹாவின் இந்திய லைன்அப் ஸ்கூட்டர்கள் கொண்டுள்ள ஹோண்டாவின் ஏசிஜி சிஸ்டம் உள்ளிட்டவை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன.

இவ்ளோ அழகான ஸ்கூட்டரை பார்த்திருக்கீங்களா! யமஹாவின் புதிய தயாரிப்பு

யமஹா வினோரா, ‘எம்' ட்ரிம்மிலும் கூடுதல் ஃபேன்ஸியான தோற்றத்தில் கிடைக்கும். தைவானில் யமஹா வினோராவின் விலை 17,900 யுவான் ஆகவும், அதன் எம் ட்ரிம்மின் விலை 18,700 யுவான் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இவற்றின் மதிப்பு ரூ.1.96 லட்சம் மற்றும் ரூ.2.05 லட்சம் ஆகும்.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
Meet The Cutest Scooter Ever - The Yamaha Vinoora
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X