ஸ்டைலான யமஹா எக்ஸ்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது? - புதிய தகவல்கள்!

இந்தியர்களை சுண்டி இழுத்த ஆர்15 மற்றும் எம்டி15 பைக் மாடல்கள் அடிப்படையில் ஒரு அட்டகாசமான புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு யமஹா திட்டமிட்டுள்ளது. அந்த புதி பைக் மாடல் எப்போது வர இருக்கிறது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

யமஹா நிறுவனத்தின் ஆர்15 பைக் இந்திய இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலமான பட்ஜெட் ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக வலம் வருகிறது. அவ்வப்போது தலைமுறை மாற்றங்களுடன் தற்போது ஆர்15 வி3.0 என்ற மாடலில் விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகையில், ஆர்15 அடிப்படையில் எம்டி-15 என்ற நேக்கட் வகை மாடலை யமஹா களமிறக்கியது.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

இந்த இரண்டு பைக் மாடல்களும் பிரிமீயம் வகை 150 சிசி மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதுடன், யமஹா வர்த்தகத்திலும் மிக முக்கிய மாடல்களாக உள்ளன. இந்த சூழலில், யமஹா ஆர்15 மற்றும் எம்டி-15 பைக் மாடல்கள் பிளாட்ஃபார்மில் மூன்றாவது பைக் மாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

அதாவது, பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் ஸ்டைலில் வேறுபடுத்தப்பட்டுள்ள இந்த பைக் மாடல் யமஹா XSR 155 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அண்மையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், இந்த புதிய பைக் மாடல் இந்தியாவிலும் நிச்சயம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய பைக் மாடல் கொரோனா சூழ்நிலை காரணமாக, அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஸிக்வீல்ஸ் தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

ஆர்15 மற்றும் எம்டி-15 பைக் மாடல்கள் போன்றே, இந்த புதிய பைக் மாடலுக்கும் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஞ்சின், ஃப்ரேம் உள்ளிட்ட பல முக்கிய பாகங்களை ஆர்-15 மற்றும் எம்டி-15 பைக் மாடல்களிலிருந்து பெற்றிருப்பதால், வர்த்தக ரீதியிலும் யமஹாவுக்கு சிறந்ததாக அமையும்.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

யமஹா ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் எம்டி-15 பைக் மாடல்களை விட இந்த பைக்கில் மற்றொரு கூடுதல் அனுகூலமான விஷயம் இருக்கிறது. இதனை சாதாரண பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, சிறிய அளவிலான ஆஃப்ரோடு சாகச பயன்பாடுகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

இந்த பைக்கில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் கொண்ட 155சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19.3 பிஎஸ் பவரையும், 14.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆர்15 மற்றும் எம்டி-15 பைக்குகளை விட சற்றே கூடுதல் செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

ஸ்டைலான யமஹா ஒய்எஸ்ஆர் 155 பைக் அறிமுகம் எப்போது?

தற்போது பாரம்பரிய டிசைன் கொண்ட பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்த பைக் மார்க்கெட்டை குறிவைத்து இதன் விலை நிர்ணயிக்கப்படும். அதாவது, ரூ.1.40 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய பைக் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
The Yamaha XSR 155 is a retro-looking motorcycle that was launched in the international market back in 2019. The company is expected to launch the XSR 155 in the Indian market sometime during the early next year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X