ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் இவ்வளவு செலவா?

பழமையான யெஸ்டி 1987 பைக்கின் உரிமையாளர் ஒருவர் தனது பைக்கை ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றியமைத்துள்ளார். இதுகுறித்த தகவல்களை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்கை இவ்வாறு மாற்றியுள்ள உரிமையாளரின் பெயர் மஞ்சுநாத். இந்த பைக்கை இவர் ரூ.1.5 லட்சத்தில் ஷாம்ஷெர் அகமது என்பவர் மூலம் ஜாவா பெராக் வடிவமைப்பிற்கு மாற்றியமைத்துள்ளார். இந்த கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட பைக்கில் முழுவதும் இரண்டு-ஸ்ட்ரோக் இயந்திர பாகங்கள் தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த பைக் மிகவும் மாடர்ன் லுக்கிற்கு மாற்றமடைந்துள்ளது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

ஜாவா பெராக் பைக்கின் மேட் ப்ளாகிஷ்-க்ரே பெயிண்ட் அமைப்பையும், பழுப்பு நிற இருக்கை அமைப்பையும் அப்படியே இந்த கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ள பைக் பெற்றுள்ளது. இந்த பைக்கின் சில பாகங்கள் அருங்காமையிலேயே தயாரிப்பட்டு பொருத்தப்பட்டுள்ளதாக மஞ்சுநாத் தெரிவித்துள்ளார்.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

ஆனால் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பெராக் மாடலின் அந்த பளப்பளப்பு தன்மை இந்த பைக்கில் இல்லாததால், மாடர்ன் பெராக் மாடலை அடிப்படையாக கொண்டு இந்த பைக் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிய வருகிறது. மாடர்ன் ஜாவா பெராக் பைக் கடந்த மாதத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

ரூ.1.95 லட்ச விலையுடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பெராக் பைக்கின் முன்பதிவுகள் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. பொதுவாக ஒற்றை இருக்கையுடன் பாப்பர் ஸ்டைல் மோட்டார்சைக்கிள்களுக்கு வாடிக்கையாளர்கள் இடையே எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. இதனால் ஜாவா பெராக்கிற்கான முன்பதிவுகள் பலத்த போட்டிக்கு மத்தியில் நடைபெற்று வருகின்றன. பெராக்கின் முன்பதிவிற்கான கட்டணம் உள்ளிட்ட இதர தகவல்களை பற்றி அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

பெராக் பைக் பற்றி சொல்ல வேண்மென்றால், ஜாவா நிறுவனம் இந்த பைக்கில் 334சிசி லிக்யூடு-கூல்டு, நான்கு-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 30 பிஎச்பி பவரையும் 31 என்எம் டார்க் திறனையும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

ஐடியல் ஜாவா இந்தியா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த போது சந்தையில் பிரபலமான மாடல் பைக் தான் பெராக். இந்நிறுவனம் தனது மைசூர் தொழிற்சாலையில் இரண்டு-ஸ்ட்ரோக் ஜாவா மற்றும் யெஸ்டி மாடல்களை 1960-1996 இடைப்பட்ட காலத்தில் தயாரித்து வெளியிட்டு வந்தது. இந்நிறுவனத்தில் இருந்து இந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்டு வந்த ஜாவா 350 மாடல் 344சிசி ஏர்-கூல்டு இரண்டு-ஸ்ட்ரோக் என்ஜினை பெற்றிருந்தது. இந்த என்ஜின் 14 பிஎச்பி பவரை 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தியது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் பலருக்கு மிகவும் பிடித்தமான மோட்டார்சைக்கிள்களாக ஜாவா மற்றும் யெஸ்டி பைக்குகள் விளங்குகின்றன. இத்தகைய பைக்குகளை பிடிக்காதவர் என்றால், அவர் இந்த இரு பைக்குகளுக்கும் இடைப்பட்ட ஒற்றுமையை புரிந்து கொள்ள முடியாததவராக தான் இருக்க வேண்டும். ஐடியல் ஜாவா இந்தியா நிறுவனம் ஜாவா என்கிற பெயரை செக் நாட்டில் உள்ள இந்நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனத்திடம் இருந்து பெற்றது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

அதன்படி தயாரிக்கப்பட்ட ஜாவா 250 மாடலின் செமி-நாக் டவுன் வெர்சன் 1969ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஜாவா பெயரை உபயோகிக்கும் உரிமத்தின் கால அளவு 1973ஆம் ஆண்டிற்குள் முடிவடைய, யெஸ்டி மாடல் பி லைன் பைக்குகளை ஜாவா பைக்குகளில் வழங்கப்பட்டு வந்த அதே என்ஜினீயரிங், ப்ளாட்ஃபாரம் மற்றும் ஸ்டைலில் ஐடியல் ஜாவா நிறுவனம் தயாரிக்க தொடங்கியது.

ஜாவா பெராக்கின் தோற்றத்திற்கு மாற்றப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்... மொத்தம் எவ்வளவு செலவானது தெரியுமா?

மீண்டும் கஸ்டமைஸ்ட் செய்யப்பட்ட யெஸ்டி டீலக்ஸ் 1987 மாடல் பைக்கிற்கு வருவோம். ஹேண்டில்பார் உள்ளிட்ட பைக்கின் மேற்புற பாகங்களில் பெரியளவில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. புதிய பெராக் மாடலை வாங்காமல் தனது 1987 மாடல் பைக்கையே பெராக் வடிவத்திற்கு மாற்றியிருக்கும் நபருக்கும் பைக்கின் உரிமையாளருக்கும் வாழ்த்துக்கள்.

Image Courtesy: Pcyezdi/Instagram

Most Read Articles
English summary
Yezdi Delux 1987 Model Modified To Look Like The Jawa Perak: Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X