அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

ஹீரோ நிறுவனம் அதன் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனை முன்னிட்டு இப்பைக் பற்றிய தகவலை அதிகாரப்பூர்வ தளத்தில் நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், அண்மையில் 100 மில்லியன் (10 கோடி) என்ற புதிய மைல்கல்லை உற்பத்தியில் தொட்டு சாதனைப் படைத்தது. இதனை முன்னிட்டு பெரும் திருவிழா போன்று நிறுவனம் கொண்டாடியது. இந்நிகழ்வில் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் மற்றும் ஹீரோ நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்துக் கொண்டனர்.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

அப்போது, 100 மில்லியன் எனும் உற்பத்தி சாதனையைத் தொட்டதற்காக ஆறு புதிய ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்களை நிறுவனம் காட்சிப்படுத்தியது. 100 மில்லியன் தயாரிப்பு நிகழ்வை முன்னிட்டே இவை அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றையே தற்போது ஒவ்வொன்றாக நிறுவனம் அறிமுக பட்டியலில் இணைத்து வருகின்றது.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

அந்தவகையில், சமீபத்தில் ஸ்பெஷல் எடிசன் ஸ்பிளெண்டர் மற்றம் பேஷன் ப்ரோ ஆகிய இருசக்கர வாகனங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கும் ஸ்பெஷல் எடிசன் பைக்குகளில் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கும் ஒன்றாகும் என நிறுவனம் கூறியிருக்கின்றது.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

இதனை உறுதிப்படுத்தும் வகையில் தனது அதிகாரப்பூர்வ வலை தளத்தில் ஸ்பெஷல் எடிசன் பைக் பற்றிய தகவலையும், விபரத்தையும் ஹீரோ நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து விரைவில் கிளாமர் பைக் மற்றும் ஹீரோ டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர்களும் அடுத்தடுத்தாக இப்பட்டியலில் இணைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

தொடர்ந்து, இவற்றின் விற்பனைக்கான அறிமுகம் ஒன்றன் பின் ஒன்றாக அல்லது ஒரே நேரத்தில் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் விநோதமான மற்றும் ஸ்பெஷல் லுக்கில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

அந்தவகையில், புதிய நிற தேர்வு, ஸ்டிக்கர், பேட்ஜ் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றுடன் அவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வ வலை தளப்பக்கத்தில் ஸ்பெஷல் எடிசன் வாகனங்கள் குறித்து வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

தற்போது புதிதாக பட்டியலில் இணைந்திருக்கும் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் கூடுதல் ஸ்போர்ட்டி லுக்கில் காட்சியளிக்கின்றது. இப்பைக்கில் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. நிறம், பேட்ஜ், புதிய எல்இடி மின் விளக்குகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என பல்வேறு புதிய சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

தொடர்ந்து, 163சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினே இப்பைக்கில் இடம்பெற இருக்கின்றது. இது அதிகபட்சமாக 15 பிஎச்பி மற்றும் 14என்எம் டார்க்கை வெளிப்படுத்தக் கூடியது. இதுமாதிரியான சில சிறப்பு அம்சங்களை இப்பைக் பெற்றிருக்கின்ற காரணத்தினால் சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 1.06 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

அறிமுக பட்டியலில் இணைந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்... இது ஓர் ஹீரோவின் ஸ்பெஷல் எடிசன் தயாரிப்பு...

ஹீரோ நிறுவனம் ஹரித்துவார் பகுதியிலேயே தனது இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வருகின்றது. இங்கே 10 கோடி உற்பத்தி எனும் புதிய மைல்கல்லை நிறுவனம் எட்டியது. தற்போது இந்த சாதனையைக் கொண்டாடும் மூடில் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

Most Read Articles
English summary
100 Million Limited Edition Hero Xtreme 160R Listed In Official Site. Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 18:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X