நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

12 ஆண்டுகளைக் கடந்தும் ஆக்டிவா ஸ்கூட்டர் ஒன்று தற்போதும் பளபளன்னு இருக்கு இதற்கான காரணத்தை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

பன்னிரெண்டு ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போதும் புத்தம் புதிது போல் வலம் வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எப்படி சாத்தியம் என்பதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரும் ஒன்று.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ஒரு தசாப்தங்களுக்கும் அதிகமாக இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதுவரை, 2.5 கோடிக்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்கப்பட்டிருக்கின்றது. இதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஹோண்டா நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பக தன்மை ஆகியவற்றால் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை தற்போதும் உச்சம்தான்.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இந்த மாதிரியான சூழ்நிலையில் 12 ஆண்டுகளைக் கடந்தும் ஓர் ஆக்டிவா ஸ்கூட்டர் சிறப்பான பயன்பாட்டை வழங்கி வருவதாக மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தகூடிய வீடியோவை ப்ரோடோமோட்டிவ் எனும் யுட்யூப் தளம் வெளியிட்டுள்ளது. வீடியோவில், புத்தம் புதிய உருவத்தில் 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டர் இருப்பதைப் போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்த ஆக்டிவா எப்படி இவ்வளவு புது பொலிவில் இருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.. இதற்கான காரணம் வேறு ஒன்றுமில்லை, ஹோண்டா ஸ்கூட்டரை அதன் உரிமையாளர் புதுப்பித்தலின் (restoration) வாயிலாக புதுப் பொலிவிற்கு அப்கிரேட் செய்திருக்கின்றார்.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இதனாலேயே 12 ஆண்டுகள் கடந்தும் இவ்வாகனம் புதுப்பொலிவுடன் இருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. இதன் உருவத்தை ரீ-பெயிண்ட் வாயிலாக மட்டுமே அவர் அப்கிரேட் செய்திருக்கின்றார். வேறு எந்த மாற்றமும் அவர் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, எஞ்ஜின் எந்தவொரு பழுதும் இன்றி தற்போது சிறந்த முறையில் இயங்குவதாக ஸ்கூட்டரின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

புது பொலிவு தோற்றத்திற்காக முதலில் அனைத்து உடற் பாகங்களையும் பணியாளர்கள் கழட்டி எடுத்திருக்கின்றனர். இதன் பின்னர் ஸ்கூட்டரின் மேல் பேனலில் இருந்து துருக்கள் மற்றும் சொட்டைகள் நீக்கப்பட்டன. இதன் பின்னரே அந்த கூறுகளுக்கு ரீ-பெயிண்டிங் செய்யப்பட்டது.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இந்த பணியை வெறும் பேன்ல்களுக்கு மட்டுமின்றி வீல், சேஸிஸ் மற்றும் எஞ்ஜின் கவர்கள் எனைத்திற்கும் பணியாளர்கள் செய்திருக்கின்றனர். இந்த ரீ-பெயிண்டிங் பணியின் காரணத்தினாலேயே 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா புத்தம் புதிய தலைமுறை ஆக்டிவா ஸ்கூட்டரைப் போன்று தென்பட தொடங்கியுள்ளது.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

பழைய ஆக்டிவா ஸ்கூட்டர் என்ன நிறத்தில் இருந்ததோ அந்த நிறம் அப்படியே மாறாமல் தற்போது வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த வாகனத்தில் எந்தவொரு உருமாற்ற வேலையும் செய்யப்படவில்லை. குறிப்பாக, ஷாக் அப்சார்பர், பிரேக் லிவர், ஃப்ரேம் போன்ற குறிப்பிட்ட சில பாகங்களுக்கு அதன் உண்மை நிறமான கருப்பு நிறமே தற்போதும் வழங்கப்பட்டுள்ளது.

நம்பவே முடியல!! 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா ஸ்கூட்டரா இது?.. புதுசு போல பளபளன்னு இருக்கு!!

இதேபோன்று, வீல் மற்றும் கிராப் ரெயில் போன்றவற்றிற்கு வெள்ளி நிற பூச்சு சேர்க்கப்பட்டுள்ளது. அதேசமயம், மின் விளக்கு இருக்கை கவர் போன்றவற்றை அவர்கள் முழுமையாக நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய கூறுகளைச் சேர்த்திருக்கின்றனர். இதன் விளைவாக பிராண்ட் நியூ ஆக்டிவா ஸ்கூட்டராக 12 ஆண்டுகள் பழைய ஆக்டிவா மாறியுள்ளது.

Image Courtesy: BROTOMOTIV

புத்தம் புதிய ஆக்டிவா ஸ்கூட்டராக மாறியிருக்கும் இது உண்மையில் 2009ம் ஆண்டு மாடல் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவாவைக் காட்டிலும் மிக பின் தங்கிய வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விற்பனையில் இருக்கும் ஆக்டிவா ஸ்கூட்டரில் ஃப்யூவல் இன்ஜெக்சன் எஞ்ஜின், எல்இடி ஹெட்லேம்ப், எச்இடி இருக்கை ஸ்விட்ச், ஐடில் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, மிக குறைந்த சப்தத்தை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் என பல்வேறு அதி நவீன அம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

Most Read Articles
English summary
12 Year Old Honda Activa scooter Restored Like A New Gen Activa. Read In Tamil.
Story first published: Monday, April 26, 2021, 10:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X