2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

2021 பஜாஜ் பல்சர் 180 பைக்குகள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

2018ல் பஜாஜ் நிறுவனம் அதன் பிரபலமான பல்சர் 180 பைக்கின் விற்பனையை நிறுத்தி இருந்தது. ஆனால் தற்போது 150- 200சிசி பைக்குகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால் இந்த 180சிசி பைக்குகளை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில்தான் தற்போது ஒரிஜினல் தோற்றத்துடன் 2021 பஜாஜ் பல்சர் 180 பைக் சில டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்துள்ளது. இதனால் இதன் அறிமுகத்தை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

தற்சமயம் விற்பனையில் உள்ள 180எஃப் பைக்கை காட்டிலும் இதன் விலை ரூ.9 ஆயிரம் அளவில் குறைவாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 180 எஃப் பைக்கின் விலை ரூ.1.14 லட்சமாக உள்ளது. புதிய 2021 பல்சர் 180 பைக்கின் விலையை ரூ.1.04 லட்சத்தில் எதிர்பார்க்கலாம்.

ஷோரூம்களுக்கு வந்தடைந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆட்டோ ட்ராவல் டெக் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பல்சர் பைக்குகளுக்கே உண்டான தோற்றத்துடன் முன்பக்க மட்கார்ட், பெட்ரோல் நீட்டிப்புகள், பின்பக்க வால்பகுதி மற்றும் பெல்லி பேனில் நேர்த்தியான சிவப்பு நிற டிகால்களை 2021 பல்சர் 180 பைக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

முன்பக்கத்தில் ஹெட்லேம்ப் பொருத்தப்படும் குழியின் வடிவம் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து தோற்றத்தில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை. தொழிற்நுட்ப அம்சங்களை பொருத்தவரையில், டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பல்சர் 220எஃப் பைக்கில் இருந்து பெறப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

நீல நிற விளக்குடன் காட்சிதரும் இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரின் மூலம் பைக்கின் வேகம், எரிபொருளின் அளவு, எரிபொருள் திறன், சைடு-ஸ்டாண்ட் போடப்பட்டுள்ளதா என்பதை, ஓடோமீட்டர் சர்வீஸ் நினைவுப்படுத்துவான் உள்ளிட்ட தகவல்களை அறிய முடியும்.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

பல்சர் 180எஃப் பைக்கில் வழங்கப்படும் என்ஜின் கடந்த ஆண்டில்தான் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டதால் பஜாஜின் வழக்கமான 178.6சிசி ஏர்-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. அதிகப்பட்சமாக 17 பிஎச்பி மற்றும் 14.52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷோரூம்களில் பல்சர் 180 பைக்குகள்!! விலை எவ்வளவு தெரியுமா?

சந்தையில் பிரபலமான 220எஃப் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருப்பினும் பல்சர் 180எஃப் பைக் விற்பனையில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது உண்மையே. இதனையும் மனதில் வைத்துதான் பல்சர் 180 பைக்கை மீண்டும் பஜாஜ் நிறுவனம் கொண்டுவருகிறது.

Most Read Articles
English summary
2021 Bajaj Pulsar 180 At Dealer Showroom, First Look Walkaround Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X