டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

முற்றிலும் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 மோட்டார்சைக்கிளின் புதிய இரு வேரியண்ட்களை டுகாட்டி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்குகளை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

லக்சரி மோட்டார்சைக்கிள் பிராண்டான டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்விஇ மற்றும் ஹைப்பர்மோட்டார்ட் எஸ்பி என்ற இரு வேரியண்ட்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.12.99 லட்சம் மற்றும் ரூ.16.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 950-இன் இந்த இரு புதிய வேரியண்ட்கள், டுகாட்டியின் அதிநவீன எலக்ட்ரானிக் தொகுப்புகளுடன் நகர்புறங்களில் மகிழ்ச்சியான பயணத்திற்கும், வளைவுகளில் எளிமையான திருப்பலுக்கும் அனுமதிக்கக்கூடியவைகளாக விளங்குகின்றன.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

வழக்கமான ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகளின் தோற்றத்தை அப்படியே பெற்று வந்துள்ள இவையும் இருக்கைக்கு அடியில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய் அமைப்பை தொடர்ந்துள்ளன. ஆனால் இந்த புதிய வேரியண்ட்களில் சில பேனல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பின்பக்க ட்ரெல்லிஸ் ஃப்ரேம் வெளியே தெரிகிறது.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

மேலும் இந்த மாற்றத்தின் காரணமாக பைக்கின் எடையும் கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும் இதனால் ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்கிற்கு உண்டான காற்று இயக்கவியல் பண்பு மாறவில்லை. நிமிர்ந்தப்படி ஓட்ட வேண்டிய இந்த டுகாட்டி பைக்கின் ஹேண்டில்பாரை கைகளை நன்கு அகலமாக வைத்து பிடிக்க வேண்டியுள்ளது.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இத்தகைய ரைடிங் சூழலினால் நன்கு கண்ட்ரோல் கிடைக்கும். தட்டையான இருக்கை, சாய்ந்தப்படி பைக்கை ஓட்டுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்விஇ பைக்கிற்கு கிராஃபிட்டி என்ற பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

2019இல் முதன்முதலாக வெளியான டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 950 கான்செப்ட் மாடலின் படங்கள், இந்த பைக்கின் வித்தியாசமான தோற்றத்தினால் வேகமாக இணையத்தில் பிரபலமாகின. அத்தகைய மோட்டார்சைக்கிளில் தற்போது இரு புதிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து டுகாட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிபுள் சந்த்ரா கருத்து தெரிவிக்கையில், "உலகளாவிய சந்தையில் பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்கிற்கான வரவேற்பை பார்த்த பிறகு, இந்தியாவில் ஆர்.வி.இ மற்றும் எஸ்பி என்ற இரு வேரியண்ட்கள் மூலம் ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்கின் வரம்பை கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்ச்சி அடைகிறோம்.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

ஹைப்பர்மோட்டார்ட் ஒரு தனித்துவமான டுகாட்டி அனுபவம் கொண்ட பைக்குகள் வரிசையாகும். அதிலும் குறிப்பாக, ஹைப்பர்மோட்டார்ட் எஸ்பி போன்ற ஒரு பைக் இப்போது இந்தியாவில் உள்ள உண்மையான மோட்டார்ட் ஆர்வலர்களுக்கு கிடைக்கிறது என்பதை அறிவது உற்சாகமாக இருக்கிறது" என்றார்.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

தோற்றத்தை பொறுத்தவரையில் ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ மற்றும் எஸ்வி பைக்குகள் அவற்றின் குறைவான எடை மற்றும் முக்கிய லைன்கள் மூலமாக மூன்றாம் தலைமுறை டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மாடலை சூப்பர்மோட்டார்ட் பந்தய உலகிற்கு அழைத்து சென்றுள்ளன. ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகளில் 937சிசி டுகாட்டி டெஸ்டாஸ்ட்ரெட்டா 11டிகிரி கோண சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 9000 ஆர்பிஎம்-இல் 114 பிஎச்பி மற்றும் 7,250 ஆர்பிஎம்-இல் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 ஆர்.வி.இ மற்றும் எஸ்பி வெர்சன்கள் புதிய, எடை குறைவான க்ளட்ச் மற்றும் மாற்று கவர்கள், அலுமினிய (இரும்பிற்கு மாற்றாக) சங்கில் அழுத்தி மற்றும் மாங்கனீசு கேம் கவர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

புதிய ஹைட்ராலிக் கண்ட்ரோல் அமைப்பின் உதவியினால் தன்னிச்சையாக செயல்படும் ஈரமான ஸ்லிப்பர் க்ளட்ச் ஆனது கியர் லிவரின் கடினத்தன்மையை மேலும் குறைத்துள்ளது. ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகளில் பொருத்தப்படும் 937 க.செ.மீ டுகாட்டி டெஸ்டஸ்ட்ரெட்டா இரட்டை சிலிண்டர் என்ஜின் பொதுவாகவே நீண்ட பராமரிப்பு சேவை இடைவெளிகளை கொண்டதாக உள்ளது.

டுகாட்டியின் புதிய ஹைப்பர்மோட்டார்ட் 950 பைக்குகள் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.12.99 லட்சம்

அதாவது, என்ஜினின் ஆயிலை ஒவ்வொரு 15,000 கிமீ தொலைவிலான பயணத்திற்கு பிறகு மாற்ற வேண்டும். அதேபோல் டெஸ்மோ பராமரிப்பு சேவைக்கு என்ஜினை ஒவ்வொரு 30,000கிமீ தொலைவிலான பயணத்திற்கு பிறகும் உட்படுத்த வேண்டும். ஹைப்பர்மோட்டார்ட் 950 மாடலில், ரைடிங் மோட்கள், போஸ்ச் கார்னரிங் ஏபிஎஸ் எவோ, டுகாட்டி டிராக்‌ஷன் கண்ட்ரோல் எவோ, டுகாட்டி வீலிங் கண்ட்ரோல் எவோ, டுகாட்டி குயிக் ஷிஃப்ட் அப்/ டவுன் எவோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் தொகுப்புகளை டுகாட்டி நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
Ducati launches two new variants of the all-new Hypermotard 950 in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X