Just In
- 29 min ago
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- 40 min ago
இந்தியா மட்டும் இல்லைங்க, வெளிநாடுகளிலும் பஜாஜ் பல்சர் பைக்குகளுக்கு அமோக வரவேற்பு!!
- 1 hr ago
சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதற்கு 50,000 பேர் பதிவு: பஜாஜ் தகவல்!
- 1 hr ago
பட்ஜெட் விலையில் அட்டகாசமான சொகுசு கார்... பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!
Don't Miss!
- Sports
என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Finance
பட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..!
- News
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
- Movies
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்படிப்பட்ட பைக்குகளை கூடவா ஹோண்டா தயாரிக்குது?! 2021 கோல்டு விங் உலகளவில் வெளியீடு..
2021 ஹோண்டா கோல்டு விங் மோட்டார்சைக்கிள் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2021 ஹோண்டா பைக்கை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் லக்சரி மோட்டார்சைக்கிளாக கோல்டு விங் விளங்குகிறது. நம்ப முடியாத தொழிற்நுட்ப அம்சங்களுடன் வழங்கப்படும் இந்த லக்சரி பைக்கின் 2021 வெர்சன்தான் உலகளவில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஹோண்டா கோல்டு விங் முன்பை காட்டிலும் கூடுதல் மேம்படுத்தப்பட்ட பயண சவுகரியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் சவுகரியமான கோணத்துடன் பின் இருக்கை பயணிக்கான பேக்ரெஸ்ட் ரீடிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மேம்படுத்தப்பட்ட பேடிங் மற்றும் உயரமான தோற்றத்தினால் ஓட்டுனர் மற்றும் பின் இருக்கை பயணி என இருவரும் 2021 கோல்டு விங் பைக்கில் மகிழ்ச்சியான பயண அனுபவத்தை பெறலாம். பைக்கின் ப்ரீமியம் தரத்தை அதிகரிக்கும் விதமாக இருக்கை சிந்தெட்டிக் லெதரால் ஹோண்டா மூடியுள்ளது.

மேலும் பைக்கில் பொருட்களை வைப்பதற்கு கொடுக்கப்படும் சேமிடத்தின் கொள்ளளவும் 11 லிட்டர் அதிகரிக்கப்பட்டு 61 லிட்டராக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் 2021 கோல்டு விங் பைக்கில் 2 ஹெல்மெட்களை எந்தவொரு பிரச்சனையுமின்றி வைக்கலாம்.

தன்னிச்சையாக சத்தத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளக்கூடிய 45 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி & ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பையும் இந்த தொலைத்தூர பைக்கில் ஹோண்டா வழங்கியுள்ளது.

ஸ்டைலை பொறுத்தவரையில் பைக்கின் பின்பக்க டெயில்லேம்பில் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இதுதவிர்த்து பைக்கின் தோற்றத்தில் பெரிய அளவில் வேறெந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளதுபோல் தெரியவில்லை.

2021 கோல்டு விங் பைக்கில் 1.8 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் கிடைமட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிசிடி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன.

இதில் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் எலக்ட்ரிக் மூலமாக பைக்கை பின்னோக்கி இயக்குவதற்கு உதவும். ஆனால் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் மற்ற பைக்குகளை போல் பின்னோக்கி தள்ளி கொண்டுதான் போக முடியும். என்ஜினின் ஆற்றல் ஷாஃப்ட் மூலமாக இயக்கும் சக்கரத்திற்கு வழங்கப்படும்.

ஸ்டாண்டர்ட் கோல்டு விங் புதிய பேர்ல் மட் க்ரே நிறத்திலும், டாப் வேரியண்ட் கன்மெட்டல் கருப்பு மெட்டாலிக் நிறத்திலும் கிடைக்கும். டிசிடி வேரியண்ட்டை கேண்டி அர்டெண்ட் சிவப்பு நிறத்திலும் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 2021 ஹோண்டா கோல்டு விங்-இன் அனைத்து வேரியண்ட்டும் அடுத்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு கிடைக்கவுள்ளது.

அங்கு இதன் விலை 28,300 அமெரிக்க டாலர்களில் இருந்து துவங்கவுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.20.37 லட்சமாகும். இந்திய சந்தையில் கோல்டு விங் பைக்கை இந்த வருடத்தில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.