ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

ஜப்பானில் நிஞ்சா 650 பைக்கிற்கு புதிய நிறத்தேர்வுகளை கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

2021ஆம் ஆண்டிற்காக பிரத்யேகமாக கவாஸாகி நிஞ்சா 650 மோட்டார்சைக்கிளிற்கு மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக்/மெட்டாலிக் இம்பெரியல் ரெட் மற்றும் லைம் க்ரீன்/எபோனி என்ற இரு நிறங்கள் புதிய தேர்வுகளாக ஜப்பான் சந்தையில் வழங்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

இதில் லைம் க்ரீன்/ எபோனி கேஆர்டி எடிசனுக்கானது ஆகும். இந்த பெயிண்ட்டில் 2021 நிஞ்சா 650 பைக் கிட்டத்தட்ட உலக சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் பயன்படுத்தப்பட்ட கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-10ஆர்ஆர் என்ற 1000சிசி பைக்கை பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

இந்த நிறத்தேர்வில் கருப்பு, பச்சை நிறங்கள்தான் பெரும்பான்மையாக இருந்தாலும், பெட்ரோல் டேங்க், முன்பக்க ஃபெண்டர் உள்பட சில பாகங்களில் சிவப்பு நிறத்தையும் பார்க்க முடிகிறது. ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கேஆர்டி எடிசனை காட்டிலும் மற்றொரு புதிய பெயிண்ட் தேர்வில்தான் நிஞ்சா 650 பைக் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக்/ மெட்டாலிக் இம்பெரீயல் ரெட் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ள இந்த பெயிண்ட் தேர்வில் கருப்பு நிறம்தான் பெரும்பான்மையாக பைக்கில் தென்படுகிறது. சிவப்பு நிறம் துணை நிறமாகவே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

ஃபைரிங்கிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வெள்ளை நிற பகுதி மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் கவாஸாகியின் அனுபவத்தை காட்டுகிறது. இத்தகைய கவர்ச்சிகரமான பெயிண்ட் தேர்வு இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

ஜப்பானில் வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி விற்பனையை துவங்கவுள்ள இந்த புதிய நிறத்தேர்வுகளுக்கான விலை 9,02,000 ஜப்பான் யென்-ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.6.37 லட்சம் ஆகும்.

ஜப்பானில் புதிய நிறங்களை பெற்றது கவாஸாகி நிஞ்சா 650!! இந்தியாவின் பக்கமும் வருமா?

இந்திய சந்தையை பொறுத்தவரையில் நிஞ்சா 650 பைக் லைம் க்ரீன், லைம் க்ரீன்/எபோனி மற்றும் பேர்ல் ஃப்ளாட் ஸ்டார்டஸ்ட் வெள்ளை என்ற 3 பெயிண்ட் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை சமீபத்தில்தான் உயர்த்தப்பட்டு ரூ.6.39 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Ninja 650 gets new colour options for MY2021 in Japan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X