அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

2021 ஜாவா 42 பைக்கின் டீசர் வீடியோ அறிமுகத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

போட்டி நிறுவனமான ராயல் என்பீல்டு புதிய புதிய வசதிகளுடன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிற நிலையில் ஜாவா பிராண்ட் அதன் 2021 42 மோட்டார்சைக்கிளின் டீசர் வீடியோவினை அதன் யுடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

ஜாவா பிராண்டை தற்சமயம் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் 2018ல் இருந்து கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது. ஜாவா 42 பைக்கிற்கு நேரடி போட்டி மாடல்களாக ஆரம்ப நிலை ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களான கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 விளங்குகின்றன.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

ஜாவா 42 தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்திற்கு ஏற்ற தோற்றத்தை கொண்ட பழமையான மோட்டார்சைக்கிளாக உள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிள் இன்னமும் தட்டையான ஹேண்டில்பார் செட்அப் உடன் பழமையான மோட்டார்சைக்கிள் தோற்றத்தையே கொண்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

இதனை மனதில் வைத்து ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கின் அறிமுக பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கு ஜாவாவும் தனது பதிலடியாக 42 பைக்கின் 2021 வெர்சனை கொண்டுவருகிறது.

இந்த நிலையில் தற்போது "மயக்கம் தொடங்குகிறது" என்ற பெயரில் வெறும் 10 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வகையில் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 2021 ஜாவா 42 பைக்கில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

இதுவரை நமக்கு கிடைத்துள்ள சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் 2021 ஜாவா 42 பைக்கில் வயர் ஸ்போக் சக்கரங்களுக்கு பதிலாக அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக டயர்களும் ட்யுப்லெஸ் டயர்களுக்கு மாற்றப்பட்டிருந்தது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

42 பைக்கின் வழக்கமான தோற்றத்தை மாற்றுவதற்காக எக்ஸாஸ்ட் குழாய், பின்பக்க சுருள்கள் மற்றும் முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் உள்ளிட்டவற்றை கருப்பு நிறத்தில் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவந்துள்ளது. அதேபோல் பின் இருக்கை பயணிக்கான க்ராப் ரெயிலும், புதிய எதிர்காற்று தடுப்பு கண்ணாடியும் இந்த 2021 மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

மற்றப்படி ஜாவா 42 பைக்கின் 293சிசி, சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் லிக்யூடு-கூல்டு என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டிருக்காது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 27.05 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு தயாராகும் 2021 ஜாவா 42 !! மாடர்ன் பைக்குகளுக்கு இணையாக அலாய் சக்கரங்களுடன்...

சிங்கிள்-சேனல் மற்றும் டபுள்-சேனல் ஏபிஎஸ் வெர்சன்களில் வழங்கப்படும் ஜாவா 42 பைக்கின் விலைகள் ரூ.1.63 லட்சம் மற்றும் ரூ.1.72 லட்சம் என உள்ளன. புதிய நிறத்தேர்வை இந்த பைக் ஏற்க நேர்ந்தால் இதன் விலைகள் ரூ.8,000ல் இருந்து ரூ.10,000 வரையில் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜாவா #jawa motorcycles
English summary
2021 Jawa 42 Teased Ahead Of Launch; To Likely Get Alloy Wheels
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X