எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

அப்டேட் செய்யப்பட்ட 2021 புருட்டேல் 800ஆர்ஆர் மற்றும் 2021 ட்ராக்ஸ்டர் ஆர்ஆர் பைக்கை பற்றிய விபரங்களை படங்களுடன் எம்வி அகுஸ்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த 2021 எம்வி அகுஸ்டா பைக்குகளை பற்றிய விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

சிறிது திருத்தியமைக்கப்பட்ட ஸ்டைல் மற்றும் புத்துணர்ச்சியான பெயிண்ட்டில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த 2021 பைக்குகளில் புதிய புருட்டேல் 800ஆர்ஆர்-இன் விலை 17,000 யூரோக்களாவும் (ரூ.14.96 லட்சம்), புதிய ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்-இன் விலை 20,000 யூரோக்களாவும் (ரூ.17.60 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

புதிய எல்இடி விளக்குகள், புதிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் புதிய டிசைனில் மூன்று எக்ஸாஸ்ட் முனைகள் உள்ளிட்டவை இவற்றில் 2021ஆம் ஆண்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ள முக்கியமான அப்கிரேட்களாகும். இதில் புதிய வண்ண டிஎஃப்டி திரையை ப்ளூடூத் மூலமாக மொபைல் போனின் எம்வி ரைடர் செயலி(ஆப்) உடன் இணைத்து கொள்ளலாம்.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

இந்த இரு பைக்குகளில் ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்-இன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதற்கு ஏற்ப அந்த பைக்கில் ஹேண்டில்பாரின் இரு முனைகளில் கண்ணாடிகள், பாப்பர் மோட்டார்சைக்கிள் போன்றதான பின்பகுதி மற்றும் வயர்-ஸ்போக் சக்கரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

2021 புருட்டேல் 800ஆர்ஆர் பைக்கிற்கு அவியோ க்ரே மெட்டாலிக் உடன் கார்பன் ப்ளாக் மெட்டாலிக் மற்றும் அவியோ க்ரே உடன் ஷாக் பேர்ல் ரெட் என்ற இரு நிறத்தேர்வுகளும், ட்ராக்ஸ்டர் ஆர்ஆர் பைக்கிற்கு மாட் மெட்டாலிக் டார்க் க்ரே உடன் மாட் மேக்னம் அவியோ க்ரே மற்றும் மாட் மெட்டாலிக் டார்க் க்ரே உடன் மாட் மேக்னம் சில்வர் என்ற இரு நிறத்தேர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

இந்த இரு எம்வி அகுஸ்டா பைக்கிலும் ஒரே 798சிசி, 3-சிலிண்டர், லிக்யூடு-கூல்டு என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 12,300 ஆர்பிஎம்-இல் 138 பிஎச்பி பவரையும், 10,250 ஆர்பிஎம்-இல் 87 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

இதனுடன் எம்வி இஏஎஸ் 3.0 பை-டைரக்‌ஷ்னல் விரைவுஷிஃப்டரை கொண்டுள்ள இந்த இரு பைக்குகளை அதிகப்பட்சமாக மணிக்கு 244கிமீ வேகத்தில் ஓட்ட முடியும். இவற்றில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான மார்சோச்சி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் சாக்ஸ் மோனோ-ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

ப்ரேக்கிங் பணியை கவனிக்க இந்த இரு பைக்குகளின் முன் சக்கரத்தில் 320மிமீ-ல் இரட்டை ரோடார்களும், பின் சக்கரத்தில் 220மிமீ-ல் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ப்ரேக்கிங் அமைப்புகள் ப்ரெம்போவின் காலிபர்களுடன் உள்ளன.

எம்வி அகுஸ்டாவின் 2021 புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர்! ஒவ்வொன்றின் விலையும் கிட்டத்தட்ட ரூ.15லட்சம்

இவற்றுடன் கார்னரிங் செயல்பாட்டுடன் ஏபிஎஸ், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், பின் சக்கரம் மேலே தூக்கப்படுவதை குறைக்கும் வசதி, லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளையும் எம்வி அகுஸ்டாவின் இந்த 2021 புருட்டேல் 800ஆர்ஆர் மற்றும் ட்ராக்ஸ்டர் ஆர்ஆர் பைக்குகள் பெற்றுள்ளன.

Most Read Articles

English summary
2021 MV Agusta Brutale & Dragster 800 unveiled globally.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X