Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிமுகத்திற்கு தயாரான நிலையில் புதிய ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக்!! இந்த ஆண்டில் வெளிவருகிறதா?
மறைப்பு எதுவும் இல்லாமல் புதிய ராயல் என்பீல்டு 650 க்ரூஸர் பைக் ஒன்று சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்சமயம் 650சிசி பைக்குகளாக இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகளை விற்பனை செய்து வருகிறது.

இவை இரண்டும் இந்தியாவை தாண்டி வெளிநாட்டு சந்தைகளிலும் ராயல் என்பீல்டு பிராண்டிற்கு பெரிய கவனத்தை பெற்று கொடுத்து வருகின்றன. இவற்றின் ப்ளாட்ஃபாரத்தில் புதியதாக உருவாகும் ராயல் என்பீல்டு 650சிசி க்ரூஸர் பைக்கின் முழு தோற்றத்தையும் ஏற்கனவே எந்தவொரு மறைப்பும் இல்லாமல் நமது தளத்தில் பார்த்திருந்தோம்.

ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் ஏற்கனவே கிளாசிக் ஸ்டைலான டூரர் மற்றும் கேஃப் ரேஸர் பைக்குகள் உள்ளன. ஆனால் பெரிய என்ஜின் உடன் க்ரூஸர் பைக் இல்லை. இதனை முழுமை செய்யும் விதத்தில்தான் புதிய 650சிசி க்ரூஸர் பைக் கொண்டுவரப்படுகிறது.

ராயல் என்பீல்டின் இந்த 650சிசி பைக் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த பைக் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை காடிவாடி செய்திதளம் வெளியிட்டுள்ளது.

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது தற்போதைய 650 இரட்டை பைக்குகளை காட்டிலும் இந்த க்ரூஸர் பைக் சற்று பருமனான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதனால் இதன் விலையும் அவற்றை காட்டிலும் சற்று ப்ரீமியமாக ரூ.3 லட்சத்திற்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த சோதனை பைக்கில் முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகள், மடக்கும் வசதி கொண்ட டிஸ்க் ப்ரேக்குகள், கருப்பு நிறத்தில் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்கள், பெரிய விண்ட்ஸ்க்ரீன், வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் & டர்ன் இண்டிகேட்டர்கள் (முன் & பின்பக்கத்தில்), கண்ணீர்துளி வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்று வட்ட வடிவில் பின்பக்கத்தை காட்டும் கண்ணாடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் பிளவுப்பட்ட இருக்கை, பின்பக்க இரட்டை ஷாக்ஸ் மற்றும் மீட்டியோரில் அறிமுகமான ட்ரிப்பர் நாவிகேஷன் வசதியுடன் தயாரிப்பு செலவை குறைக்கும் விதமாக தற்போதைய 650 இரட்டை பைக்குகளில் இருந்து சில பாகங்களை இந்த க்ரூஸர் பைக்கிற்கு பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்ரூஸர் மோட்டார்சைக்கிளின் பண்பிற்காக இண்டர்செப்டர் மற்றும் காண்டினெண்டல் பைக்குகளை காட்டிலும் இதன் வீல்பேஸ் நீளமானதாக வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான 648சிசி இணையான-இரட்டை சிலிண்டர் என்ஜினேயே இந்த ராயல் என்பீல்டு பைக்கும் பெற்று வரவுள்ளது.

அதிகப்பட்சமாக 47 பிஎஸ் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த என்ஜின் உடன் ஸ்லிப்பர்-க்ளட்ச் வசதி கொண்ட 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தில் பைக் கிட்டத்தட்ட அனைத்து தயாரிப்பு பணிகளையும் நிறைவு செய்ததுபோல் காட்சியளிக்கிறது. இதனால் இதன் அறிமுகத்தை இந்த 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கலாம்.