மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

அறிமுகத்திற்கு முன்னதாக 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் ஒன்று மீண்டும் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தற்சமயம் கிளாசிக் 350 பைக் மாடல் தான் பிரதான விற்பனை மாடலாக விளங்கி வருகிறது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

இதனாலேயே அடுத்ததாக கிளாசிக் 350 பைக்கிற்கு புதிய தலைமுறை அப்கிரேடை வழங்குவதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் தீவிரமாக உள்ளது. இந்த ஆண்டிற்குள்ளாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 2021 கிளாசிக் 350 பைக் இந்திய சாலைகளில் பல முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

அவற்றின் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் புதிய கிளாசிக் 350 பைக் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை வீடியோ குரு ஜீட் விலாக்ஸ் (Image Courtesy: Guru Jeet Vlogs) என்கிற யுடியூப் சேனலின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த வீடியோவில் பைக் டீலர்ஷிப் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுபோல் தெரிகிறது. இதனால் புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் வருகிற ஜூலை மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

ஏற்கனவே கூறியதுபோல், புதிய கிளாசிக் 350 பைக்கை சோதனை ஓட்டங்களில் கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக ராயல் என்பீல்டு நிறுவனம் உட்படுத்தி வருவதால், இந்த பைக்கை பற்றிய விபரங்கள் ஓரளவிற்கு நமக்கு ஏற்கனவே தெரிய வந்துவிட்டன.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

மேலும் மேலுள்ள வீடியோவிலும் கிளாசிக் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவந்துள்ள மாற்றங்களை அறியலாம். கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட மீட்டியோர் 350 பைக்கின் அதே புதிய ஜே-ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் தான் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

இதனால் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உள்பட பெரும்பான்மையான பாகங்கள் 2021 கிளாசிக் 350 பைக்கிற்கு மீட்டியோர் மாடலில் இருந்து பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.4 பிஎஸ் மற்றும் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

கவனிக்கத்தக்க மாற்றங்களாக தற்போதைய கிளாசிக் 350 பைக்கை காட்டிலும் புதிய மாடலில் ஹேண்டில்பார் மீட்டியோரில் வழங்கப்படுவதை போன்று சற்று உயரமாக, பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் கேமிரா கண்களில் சிக்கிய 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350!! ஜூலையில் அறிமுகமா?

அதேபோல் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியும் மீட்டியோரை போல் தேவைக்கு ஏற்ப மடக்கி வைக்கும் வசதியுடன் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இருக்கை அமைப்பும் சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இது முன்பை காட்டிலும் தட்டையானதாக வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
2021 Royal Enfield Classic 350 Spotted Yet Again, Launch Imminent.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X