ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் தனி இடம் பிடித்துள்ளன. இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்கள், சாதாரண வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பைக் ஆர்வலர்களையும் கவர்ந்தன.

அந்த சமயத்திலேயே ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது அந்த பைக் எங்களை வெகுவாக கவர்ந்தது. 2018 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-4 மாடலின் ரிவியூவை நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யுங்கள். அதற்கு பின் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. இடைப்பட்ட காலத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான இன்டர்செப்டார் 650 பைக்குகளை விற்பனை செய்து விட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு சில விஷயங்களும் மாறியுள்ளன.

2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 மாடலை டெஸ்ட் ரைடு செய்யும் வாய்ப்பு எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. முன்பு போலவே தற்போது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 எங்களை கவர்கிறதா? என்பதை பரிசோதிக்கும் ஆர்வம் எங்களுக்கு அதிகமாக இருந்தது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 மாடலின் டெஸ்ட் ரைடு ரிப்போர்ட்டை இந்த செய்தியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

டிசைன்

டிசைன் என எடுத்து கொண்டால், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. வட்ட வடிவ ஹெட்லேம்ப் உடன் அதே ரெட்ரோ டிசைன் தொடர்கிறது. இந்த வட்ட வடிவ ஹெட்லேம்ப்பை சுற்றிலும் க்ரோம் வேலைப்பாடுகளையும் நம்மால் காண முடிகிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

ஹெட்லேம்பிற்கு மேலே டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இடது பக்கம் ஸ்பீடோமீட்டரும், வலது பக்கம் டேக்கோமீட்டரும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஸ்பீடோமீட்டருக்கு உள்ளே சிறிய எல்சிடி ஸ்க்ரீன் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது டிரிப் மீட்டர் மற்றும் ஓடோமீட்டர் உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

அதே சமயம் இந்த மோட்டார்சைக்கிளின் க்ரோம் பூசப்பட்ட கண்ணாடிகள் பிரீமியமான உணர்வை தருகின்றன. பக்கவாட்டில் இருந்து இந்த மோட்டார்சைக்கிளை பார்க்கும்போது பல்வேறு அம்சங்கள் உங்களின் கவனத்தை ஈர்க்கும். குறிப்பிட்டு சொல்வதென்றால், அது எரிபொருள் டேங்க்தான். எரிபொருள் டேங்க்கின் இரு பக்கமும் ராயல் என்பீல்டு லோகோ வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் டேங்க்கின் மூடியிலும் க்ரோம் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

வென்ச்சுரா ப்ளூ வண்ண ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 பைக்கை நாங்கள் டெஸ்ட் ரைடு செய்வதற்காக பெற்றோம். நிச்சயமாக சாலையில் இந்த வண்ணம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும். இந்த மோட்டார்சைக்கிளில் நீளமான சிங்கிள்-பீஸ் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் டிசைனை மேம்படுத்தும் வகையிலும் இந்த இருக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் கவனத்தை ஈர்க்கும் போட்டியில், எரிபொருள் டேங்க்கிற்கு அடுத்தபடியாக இன்ஜின் மற்றும் சைலென்சர்கள் உள்ளன. இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 மாடலின் டிசைனில், பெரிய பேரலல்-ட்வின் இன்ஜினும், ட்வின் எக்ஸாஸ்ட் பைப்களும் முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலும் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

இன்ஜினின் பக்கவாட்டு கவர்களில் க்ரோம் பூச்சுக்கள் வழங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், சிலிண்டர்கள் கருப்பு நிறத்திலும், இன்ஜின் ஹெட் சில்வர் நிறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிக சிறப்பான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் சைடு பேனல்கள் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் இன்டர்செப்டார் லோகோ இடம்பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

பின் பகுதியில் இந்த மோட்டார்சைக்கிள் மிகவும் எளிமையாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஹாலோஜன் பல்பு பொருத்தப்பட்ட டெயில்லேம்ப் மற்றும் இண்டிகேட்டர்கள், பதிவு எண் பலகை ஆகியவை பின் பக்க ஃபெண்டருடன் இணைந்த வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது, மேல் நோக்கியவாறு காணப்படும் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பு, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளுக்கு பெரிய மோட்டார்சைக்கிள் தோற்றத்தை வழங்குகிறது. ஒட்டுமொத்தத்தில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் டிசைன் அமர்க்களப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிளின் டிசைனர்கள், மிகவும் எளிமையாக அதே நேரத்தில் கிளாசிக்காக டிசைன் செய்துள்ளனர்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

இன்ஜின் & செயல்திறன்

2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில், ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 648 சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப இன்ஜின் மாற்றப்பட்டிருந்தாலும் கூட, பவர் மற்றும் டார்க் அவுட்புட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,150 ஆர்பிஎம்மில் 47 பிஎச்பி பவரையும், 5,250 ஆர்பிஎம்மில் 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களும் ரைடருக்கு மிகவும் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ராயல் என்பீல்டு நிறுவனம் மெனக்கெட்டுள்ளது தெரிகிறது. கிளட்ச் லிவர் மென்மையான உணர்வை தருவது அதற்கு சாட்சியமாக இருக்கிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

80 சதவீதத்திற்கும் மேலான டார்க் திறன், 3,000 ஆர்பிஎம்மிற்கு உள்ளாகவே கிடைத்து விடுகிறது. எனவே குறைவான வேகத்திலும் அருமையான பிக்-அப்பை இந்த மோட்டார்சைக்கிள் வழங்குகிறது. இது ரைடருக்கு நிச்சயமாக உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் எந்தவொரு கியரிலும் வேகத்தை பிக்-அப் செய்வதும் மிகவும் எளிமையாக இருக்கிறது. இன்ஜினை 'ரெவ்' செய்வது உங்களது விருப்பம் என்றால், இந்த மோட்டார்சைக்கிள் அதற்கும் ஏற்றதுதான்.

மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த மோட்டார்சைக்கிள் வெறும் 4,200 ஆர்பிஎம்மிலேயே எட்டி விடுகிறது. அதே சமயம் மணிக்கு 120 கிலோ மீட்டர்கள் என்ற வேகம் ஆறாவது கியரில், 5,000 ஆர்பிஎம்மில் எட்டப்படுகிறது. இந்த வேகத்திலும் கூட ஓவர்டேக் செய்வது எளிதாகதான் இருக்கிறது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை 7 வினாடிகளில் எட்ட முடிகிறது. அதே சமயம் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடிகிறது. மணிக்கு 120-130 கிலோ மீட்டர் வேகத்தில் க்ரூஸ் செய்வது ஓட்டுவது நன்றாக இருக்கிறது. நகர பகுதிகளில் இந்த மோட்டார்சைக்கிள் எங்களுக்கு ஒரு லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கியது. அதே சமயம் நெடுஞ்சாலைகளில் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 28 கிலோ மீட்டராக அதிகரிக்கிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

ரைடு & ஹேண்ட்லிங்

நிறைய ஷார்ப்பான பெண்டுகள் மற்றும் கார்னர்கள் உள்ள சாலைகளில், நீங்கள் கூடுதல் கவனத்துடன் இல்லாவிட்டால், எக்ஸாஸ்ட் சாலையில் உரசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, 650 ட்வின்ஸ் மோட்டார்சைக்கிள்களில், பைரெல்லி பாந்தம் ஸ்போர்ட்காம்ப் டயர்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது டயர்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, பைரெல்லி டயர்களுக்கு பதிலாக சியட் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இது ஏமாற்றமான நடவடிக்கையாகதான் தெரிந்தது. ஆனால் சியட் டயர்கள் நல்ல க்ரிப்பை வழங்குகின்றன. உலர்ந்த சாலைகளில் க்ரிப் மிக சிறப்பாக கிடைக்கிறது. ஆனால் ஈரமான சாலைகளில் பயணிக்கும்போது மட்டும்தான் க்ரிப் லெவல் சற்றே குறைகிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

சஸ்பென்ஸன் பணிகளை பொறுத்தவரை, முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்ஷார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. ரியர் ஷாக் அப்சார்பர்களை ப்ரீ-லோடுக்கு அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். குறைவான வேகத்தில் செல்லும்போது, சாலையில் உள்ள குழிகளை பெரிதாக உணர முடியவில்லை. ஆனால் அதிக வேகத்தில் செல்லும்போது சற்றே உணர முடிகிறது.

பிரேக்கிங்கை பொறுத்தவரை முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்குகள் மிகவும் சிறப்பாக செயலாற்றுகின்றன. அத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் பிரேக் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த பைக்கின் ரைடிங் பொஷிஷன் நேராகவும், நிமிர்ந்த வகையிலும் உள்ளது. நகர பகுதிகளில் நெருக்கடியான இடங்களில் சற்றே பெரிய இந்த பைக்கை ஓட்டுவதற்கு இது ரைடருக்கு உதவுகிறது. அதே சமயம் நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை, தொலைதூரங்களையும் எளிதாக கடப்பதற்கு இது உதவும்.

டெஸ்ட் ரைடு செய்வதற்காக எங்களிடம் இருந்தபோது, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கை நாங்கள் சுமார் 300 கிலோ மீட்டர்கள் வரை ஓட்டினோம். ஆனால் இன்னும் ஓட்ட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் இருக்கை இன்னும் கொஞ்சம் அகலமாகவும், மென்மையாகவும் இருந்திருக்க வேண்டும். இது தொலைதூரங்களையும் எளிதாக கடப்பதற்கு உதவி செய்யும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால், எந்தவொரு சாலையிலும் ஓட்டுவதற்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாகதான் இது உள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

வசதிகள்

துரதிருஷ்டவசமாக வசதிகளை பொறுத்தவரை, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 சுமார் 3 ஆண்டு கால அளவில் பெரிதாக மாறவில்லை. முன் பகுதியில் நாங்கள் ஏற்கனவே கூறியபடி டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இந்த பைக் பெற்றுள்ளது. ஸ்பீடோமீட்டரில் உள்ள சிறிய எல்சிடி ஸ்க்ரீன் மட்டும்தான், இது 2021ம் ஆண்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் என்பதை எங்களுக்கு நினைவுபடுத்தியது.

பெரிய எல்சிடி அல்லது டிஎஃப்டி யூனிட் வழங்கப்பட்டிருக்கலாம். அதேபோல் ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைத்தோம். ஆனால் இந்த மோட்டார்சைக்கிளின் புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்யும்போது இந்த வசதிகளை வழங்கலாம் என ராயல் என்பீல்டு நிறுவனம் நினைத்திருக்கலாம். எனவே இதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

ஆனால் இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளில் நிறைய வண்ண தேர்வுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது. நாங்கள் வென்ச்சுரா ப்ளூ வண்ண மோட்டார்சைக்கிளை ஓட்டினோம். நடப்பாண்டு ஆண்டு இந்த மோட்டார்சைக்கிளில் நான்கு புதிய வண்ண தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், வென்ச்சுரா ப்ளூ வண்ண தேர்வும் ஒன்றாகும்.

ராயல் என்பீல்டு இன்டார்செப்டார் 650 வண்ண தேர்வுகள்

 • மார்க் 2
 • கேன்யான் ரெட்
 • வென்ச்சுரா ப்ளூ
 • ஆரஞ்ச் க்ரஷ்
 • டவுன்டவுன் ட்ராக்
 • பேக்கர் எக்ஸ்பிரஸ்
 • சன்செட் ஸ்ட்ரிப்
 • எங்களை பொறுத்தவரை டவுன்டவுன் ட்ராக் வண்ண தேர்வைதான் சிறப்பானதாக கூறுவோம். ஆனால் வண்ண தேர்வு என்பது ஒவ்வொருவரின் விருப்பத்தை பொறுத்தும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எந்த வண்ண தேர்வை தேர்வு செய்கிறீர்களோ, அதை பொறுத்து விலை மாறுபடும்.

  ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

  போட்டியாளர்கள்

  போட்டி என எடுத்து கொண்டால், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் இருக்கும் ஒரே போட்டி ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள்தான். ஆனால் விலையை கருத்தில் கொண்டால், கேடிஎம் 390 ட்யூக் மற்றும் கவாஸாகி நின்ஜா 300 உள்ளிட்ட பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 போட்டியிடும். ஆனால் இது ஆப்பிள்களை ஆரஞ்ச் உடன் ஒப்பிடுவது போன்றது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் உடன் ஒப்பிடும்போது, இவை முற்றிலும் வித்தியாசமானவை.

  ஆனால் குணாதிசயம் மற்றும் எந்த வழியில் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது? என்பதையெல்லாம் கருத்தில் கொண்டால், கவாஸாகி டபிள்யூ800 மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்வின் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் உடன் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 போட்டியிடும். ஆனால் இந்த மோட்டார்சைக்கிள்கள் விலை உயர்ந்தவை. எனவே எளிமையாக கூறுவதென்றால், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாளரே கிடையாது.

  ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

  விலை மற்றும் வாரண்டி

  நாங்கள் ஏற்கனவே கூறியபடி, வண்ண தேர்வை பொறுத்து, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் விலை மாறுபடும்.

  ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 விலைகள்:

  2021 Royal Enfield Interceptor 650 Colour Price
  RE Interceptor 650 Canyon Red ₹2.81 Lakh
  RE Interceptor 650 Orange Crush ₹2.81 Lakh
  RE Interceptor 650 Ventura Blue ₹2.81 Lakh
  RE Interceptor 650 Sunset Strip ₹2.89 Lakh
  RE Interceptor 650 Downtown Drag ₹2.89 Lakh
  RE Interceptor 650 Baker Express ₹2.89 Lakh
  RE Interceptor 650 Mark 2 ₹3.03 Lakh
  ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பிஎஸ்-6 ரிவியூ! பைக் எப்படி இருக்குனு தெரிஞ்சா இப்பவே வாங்க ஆசைப்படுவீங்க!

  ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 2 ஆண்டுகள்/40 ஆயிரம் கிலோ மீட்டர் ஸ்டாண்டர்டு வாரண்டி உடன் வருகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகள்/20 ஆயிரம் கிலோ மீட்டர் நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் தேர்வு செய்யலாம்.

  மேலும் Make It Yours கஸ்டமைசேஷன் வசதியையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வைத்துள்ளது. இதன்படி இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிளின் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், பல்வேறு ஆக்ஸஸெரீஸ்கள் மூலம் இந்த மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும்.

  டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?

  2018ம் ஆண்டு இந்த மோட்டார்சைக்கிளை நாங்கள் ஓட்டியபோது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வெற்றி சகாப்தத்தின் தொடக்கம் இது என நாங்கள் கூறியிருந்தோம். நாங்கள் சரியாகதான் கூறியுள்ளோம் என்பதை தற்போது உணர்ந்து கொண்டோம். அதற்கேற்ப ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 அனைத்து அம்சங்களிலும் மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் அதிக தொழில்நுட்ப வசதிகளை வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அது மட்டும் நடந்து விட்டால், ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 அனைவருக்கும் விருப்பமான மோட்டார்சைக்கிளாக மாறி விடும்.

Most Read Articles

English summary
2021 royal enfield interceptor 650 bs6 review design engine performance price
Story first published: Friday, August 13, 2021, 23:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X