ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய 2021 650 ட்வின்ஸ் (இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650) மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த 2 மோட்டார்சைக்கிள்களிலும் ராயல் என்பீல்டு சிறிய அளவிலான மாற்றங்களை மட்டுமே செய்துள்ளது.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

2020 ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள், ராக்கர் ரெட், மிஸ்டர் க்ளீன், டக்ஸ் டீலக்ஸ், பிரிட்டீஷ் ரேசிங் க்ரீன், வென்டுரா ஸ்ட்ரோம் என மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கும். இந்த பைக்கின் விலை 2.75 லட்ச ரூபாய் முதல் 2.97 லட்ச ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதே சமயம் புதிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள், மார்க் 2, பேக்கர் எக்ஸ்பிரஸ், சன்செட் ஸ்ட்ரிப், டவுன்டவுன் ட்ராக், வெண்டுரா ப்ளூ, கேன்யான் ரெட் மற்றும் ஆரஞ்ச் க்ரஷ் என மொத்தம் 7 வண்ண தேர்வுகளில் கிடைக்கும். இந்த பைக்கின் விலை 2.59 லட்ச ரூபாய் முதல் 2.88 லட்ச ரூபாய் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ஆனால் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு பைக்குகளிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி வழங்கப்படவில்லை. ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை ராயல் என்பீல்டு நிறுவனம் முதல் முறையாக மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து புதிய ஹிமாலயன் பைக்கிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி வழங்கப்பட்டது.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

எனவே 2021 ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டீலர்ஷிப்களுக்கு வந்துள்ள புதிய ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குளிலும் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியை காண முடியவில்லை.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

அதேபோல் மேம்படுத்தப்பட்ட இந்த 2 புதிய பைக்குகளிலும் இன்ஜினில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. 648 சிசி, பேரலல் ட்வின் இன்ஜின் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களின் விற்பனையும் ஏற்கனவே சிறப்பாக இருந்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் மிகவும் சிறப்பாக விற்பனையாகி கொண்டுள்ளன.

ட்ரிப்பர் நேவிகேஷன் இல்லை... 2021 ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?

இந்த சூழலில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு மோட்டார்சைக்கிள்களும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளதால், அவற்றின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளையும், ஏற்கனவே விற்பனையில் உள்ள பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Interceptor 650, Continental GT 650 Launched In India - Here Are The Details. Read in Tamil
Story first published: Monday, March 22, 2021, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X