கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

2021 ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகளுக்கு வழங்கப்படவுள்ள புதிய நிறத்தேர்வுகள் குறித்த விபரங்கள் அவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

அடுத்த ஏழு வருடங்களுக்கு புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தயாரிப்புகளை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒன்றாக அறிமுகப்படுத்தவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தது.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

அதன்படி முற்றிலும் புதிய மீட்டியோர்350 மற்றும் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஹிமாலயன் பைக்குகள் வெளிவந்தன. இதன் தொடர்ச்சியாக 650சிசி இரட்டை பைக்குகளுக்கு அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் விதமாக புதிய நிறத்தேர்வுகளை வழங்க ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

ஆனால் இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 பைக்குகள் பெறவுள்ள புதிய நிறங்கள் என்னென்ன என்பது குறித்த விபரங்களை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடாத நிலையில் தற்போது அவை புதிய படம் ஒன்றின் மூலமாக இணையத்தில் கசிந்துள்ளன.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

இந்த படத்தில், இண்டர்செப்டர் 650 பைக்கை 7 நிறங்களில் பார்க்க முடிகிறது. இதில் ஆரஞ்ச் க்ரஷ், கிளிட்டர் & டஸ்ட் மற்றும் பேக்கர் எக்ஸ்பிரஸ் நிறங்களில் ஏற்கனவே இந்த 650சிசி பைக் இந்தியாவில் விற்பனையில் உள்ளது.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

மற்ற ராவிஷிங் ப்ளாக், சாம்பல் வாத்து, வென்ச்சுரா நீலம் மற்றும் ராயல் சிவப்பு என்ற நான்கு நிறங்களை தான் இந்த பைக் புதியதாக ஏற்கவுள்ளது. காண்டினெண்டல் ஜிடி பைக்கை பொருத்தவரையில், இந்த படத்தில் ஐந்து விதமான நிறங்களில் இந்த பைக் காட்சி தருகிறது.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

இதில் மிஸ்டர் க்ளீன் நிறத்தேர்வு ஏற்கனவே விற்பனையில் உள்ளது. புதிய தலைமுறை ராயல் என்பீல்டு 650 இரட்டை பைக்குகள் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகின்றன.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

இருப்பினும் இந்த பைக்குகளில் கொண்டுவரப்படும் முக்கியமான அப்கிரேட் புதிய நிறத்தேர்வுகளாவும், காஸ்மெட்டிக் மாற்றங்களாகவும் தான் இருக்கும். ரைடிங் அனுபவம் அவ்வளவு நன்றாக இல்லை என சில வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வெளிவந்துள்ளதால், தயாரிப்பு நிறுவனம் பைக்குகளின் அமைப்பை சிறிது மாற்றியிருக்கலாம்.

கொஞ்ச நாள் காத்திருங்கள்... புதிய நிறங்களில் அறிமுகமாகின்றன 2021 ராயல் என்பீல்டு 650 பைக்குகள்!!

அதேநேரம் மீட்டியோரில் அறிமுகமான ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தை புதிய ஹிமாலயன் பைக்குகளை தொடர்ந்து 2021 650 ட்வின்ஸ் பைக்குகளிலும் எதிர்பார்க்கலாம். இந்த இரு பைக்கிலும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 648சிசி, ஏர்-கூல்டு இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது.

Most Read Articles

English summary
2021 royal enfield 650 twins new colour options
Story first published: Thursday, February 25, 2021, 16:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X