சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

முற்றிலும் புதிய ஹயபுஸா மோட்டார்சைக்கிளை இந்தியாவில் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த சுஸுகி பைக்கை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

2021 ஹயபுஸா மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் அறிவித்திருந்தது.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

அதனை தொடர்ந்து தற்போது, இந்த அல்டிமேட் ஸ்போர்ட் பைக் மீண்டும் இந்தியாவிற்கு வருவதாகவும், இந்த பைக்கை இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

மேலும் இது தொடர்பான டிவிட்டர் பதிவில் குறும் வீடியோ ஒன்றையும் சுஸுகி நிறுவனம் பதிவிட்டுள்ளது. உலகளவில் பிரபலமான சுஸுகி மோட்டார்சைக்கிள்களுள் ஹயபுஸாவும் ஒன்று.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

இதன் முந்தைய தலைமுறையின் விற்பனை இந்தியாவில் கடந்த ஆண்டில் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறையின் காரணமாக நிறுத்தி கொள்ளப்பட்டது. விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தலைமுறை ஹயபுஸா சுஸுகி மோட்டார்சைக்கிளின் மிக பெரிய அறிமுகங்களில் ஒன்றாகும்.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் சில சுஸுகி டீலர்ஷிப் மையங்களில் நடைபெற்று வருகிறது. உலகளாவிய் அளவில் புதிய சுஸுகி ஹயபுஸா 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

இதனால் இந்த பைக்கில் புதியதாக கொண்டுவரப்பட்ட அம்சங்களை ஏற்கனவே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுவிட்டது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1340சிசி இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

அதிகப்பட்சமாக 9700 ஆர்பிஎம்-ல் 187 பிஎச்பி மற்றும் 7000 ஆர்பிஎம்-ல் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

புதிய புஸா உள்பட பல்வேறு விதமான ரைடிங் மோட்களை பெற்றுவந்துள்ள 2021 ஹயபுஸா மோட்டாரசைக்கிளில் என்ஜின் ப்ரேக் கண்ட்ரோல், பவர் மோட் செலக்டர், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இரு-திசை விரைவு ஷிஃப்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல் மற்றும் முன் சக்கரம் தூக்குவதை கண்ட்ரோல் செய்யும் அமைப்பு உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

இவற்றுடன் 6-அச்சு ஐஎம்யு மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் முதலிய தொழிற்நுட்பங்களையும் இந்த 2021 பைக் பெற்றுள்ளது. ஹயபுஸா பைக்குகளுக்கு எப்போதுமே இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

சுஸுகி ஹயபுஸா பைக் பிரியர்கள் காத்திருந்தது போதும்!! இந்திய அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளிவந்தது!

இதனால் புதிய தலைமுறை சுஸுகி ஹயபுஸா பைக்குகளுக்கும் நல்லப்படியான வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த சுஸுகி பைக்கிற்கு விற்பனையில் கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-14ஆர் பைக் போட்டியாக விளங்கும்.

Most Read Articles

English summary
All-new Suzuki Hayabusa to go on sale in India this month.
Story first published: Sunday, April 4, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X