Just In
- 7 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2021 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்... பிப்ரவரி இறுதியில் டெலிவரி...
2021 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புத்தம் புதிய 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக்கை (2021 Triumph Speed Triple 1200 RS) டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜனவரி 28) முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய பைக்கிற்கான முன்பதிவுகளும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி மாத கடைசியில் டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளன.

2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் சமீபத்தில்தான் சர்வதேச அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. உடனடியாக அதனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளிலும் டிரையம்ப் நிறுவனம் இறங்கியுள்ளது. டிரையம்ப் நிறுவனத்தின் தாய்லாந்து ஆலையில் இருந்து, முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, புதிய ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் விற்பனை செய்யப்படும்.

புதிய டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக்கில், 1160 சிசி, மூன்று-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 10,750 ஆர்பிஎம்மில் 180 பிஎச்பி பவரையும், 9,000 ஆர்பிஎம்மில் 125 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பழைய மாடலை காட்டிலும் 30 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் கூடுதலாக உருவாக்கும்.

இந்த இன்ஜினுடன் புதிய 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில், எல்இடி பகல் நேர விளக்குகளுடன், எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எரிபொருள் டேங்க் புதிய கிராபிக்ஸ் உடன், முன்பை விட முரட்டுத்தனமாக காட்சியளிக்கிறது. இந்த எரிபொருள் டேங்க் 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது.

முந்தைய மாடலை காட்டிலும், புதிய 2021 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் 10 கிலோ எடை குறைவானது. புதிய மாடலின் எடை 198 கிலோ மட்டுமே. இந்த பைக்கின் வீல் பேஸ் 1445 மிமீ. ஹேண்டில்பார் அகலம் 792 மிமீ. இருக்கை உயரம் 830 மிமீ. அத்துடன் பல்வேறு வசதிகளையும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் பெற்றுள்ளது.

இதன்படி இந்த பைக்கில் 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரெயின், ரோடு, ஸ்போர்ட், டிராக் மற்றும் ரைடர் ஆகிய 5 ரைடிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. கீ லெஸ் எண்ட்ரி சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய பைக்கிற்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது என்றாலும், முன்பதிவு தொகை குறிப்பிடப்படவில்லை.

இந்திய சந்தையில் 16.95 லட்ச ரூபாய் என்ற விலையில், புதிய 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக்கை டிரையம்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் விற்பனை செய்யப்படவுள்ளது. அதே சமயம் இரண்டு வண்ண தேர்வுகள் வழங்கப்படும்.

இதன்படி சிகப்பு மற்றும் சில்வர் கிராபிக்ஸ் உடன் ஷேப்பியர் பிளாக் வண்ண தேர்வும் மற்றும் கருப்பு, சில்வர் மற்றும் மஞ்சள் கிராபிக்ஸ் உடன் மேட் சில்வர் ஐஸ் வண்ண தேர்வும் வழங்கப்படும். விலை உயர்ந்த தயாரிப்பு என்றாலும், இந்த புதிய 2021 ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்எஸ் பைக் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.