10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா

2021 ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டிருப்பதாக டிரையம்ப் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிரையம்ப், 2021 ஸ்பீடு ட்வின் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பைக் விலையை இன்னும் நிறுவனம் அறிவிக்கப்படாதநிலையில், வாகனத்துறை வல்லுநர்கள் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் அது விற்பனைக்கும் வரும் கூறி வருகின்றனர்.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே 2021 ஸ்பீடு ட்வின் பைக்கின் முன் பதிவு இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் என்ற முன் தொகையில் பைக்கிற்கான புக்கிங் நடைபெற்று வருகின்றது. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக அதிகாரப்பூர்வமாக முன்பதிவு பணிகள் தொடங்கியிருக்கின்றன.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

முன்பதிவு பணியைத் தொடர்ந்து தற்போது பைக்குறித்த அனைத்து முக்கிய விபரங்களும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த விபரங்களின் வாயிலாக பைக்கில் என்ன மாதிரியான அப்டேட்டுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

புதிய கிராஃபிக்ஸ், அப்டேட் செய்யப்பட்ட எஞ்ஜின் மற்றும் உதிரி பாகங்கள் 2021 ஸ்பீடு ட்வின் பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ட்ரையம்ப் நிறுவனம், 1,200 சிசி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜினையே இப்பைக்கில் பயன்படுத்தியிருக்கின்றது.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜின்தான் போனேவில்லை பைக்குகளிலும் டிரையம்ப் பயன்படுத்தி வருகின்றது. ஆனால், அவற்றில் இருப்பதைக் காட்டிலும் 3 பிஎச்பி திறன் அதிகமாக வெளியேற்றும் வகையில் 2021 ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான எஞ்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

எஞ்ஜினை மட்டுமின்றி சஸ்பென்ஷனையும் நிறுவனம் அப்டேட் செய்திருக்கின்றது. 43 மிமீ அளவுள்ள மர்ஸூச்சி ஃபோர்க் கார்ட்ரிட்ஜ் டேம்பிங் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இததுடன், உயர் பாதுகாப்பான நிறுத்த வசதிக்காக ப்ரெம்போ 4-பிஸ்டன் எ50 ரேடியல் மோனோ பிளாக் காலிபர்கள் மற்றும் 320 மிமீ அளவுள்ள டிஸ்க் முன்பக்க வீலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

தொடர்ந்து, பின் பக்க வீலில் நிஸான் இரு-பிஸ்டன் காலிபருடன் கூடிய 220 மிமீ டிஸ்க் பின் பக்க வீலில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல மாற்றங்கள் 2021 டிரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கில் செய்யப்பட்டிருக்கின்றன.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

பைக்கின் கவர்ச்சியான உருவ தோற்றத்திற்காக 12 ஸ்போக்குகள் கொண்ட 17 இன்ச் அலாய் வீல், சிறந்த இழுவை மற்றும் கிரிப்னஸுக்காக மெட்ஸெலர் ரேஸ்டெக் ஆர்ஆர் டயர்கள் ஆகியவை இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், மழை, சாலை மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களும் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

10 லட்ச ரூபா ட்ரையம்ப் ஸ்பீடு ட்வின் பைக்கிற்கான புக்கிங் இந்தியாவில் தொடங்கியது... முன்தொகையே இத்தன ஆயிரங்களா?

மிக முக்கியமாக பைக்கை கூடுதல் அழகான மற்றும் கண் கவர் மாடலாக மாற்றுவதற்காக புதிய நிறத்திலான கிராஃப் (ஸ்டிக்கர்கள்) பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய வசதிகள் கொண்ட பைக்கிற்கான புக்கிங்கையை டிரையம்ப் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles
English summary
2021 Triumph Speed Twin Bookings Open In India. Read In Tamil.
Story first published: Tuesday, June 8, 2021, 16:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X