இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் உலக அளவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

பிரிமீயம் பைக் மார்க்கெட்டில் பாரம்பரிய அம்சங்களுடன் கிடைக்கும் ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் வசதிகள் இதனை சிறந்த தேர்வாக வைத்துள்ளது.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த நிலையில், யூரோ-5/பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் கூடிய ஸ்பீடு ட்வின் பைக்கை ட்ரையம்ஃப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021 மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும் அம்சங்களை பெற்றுள்ளது.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த புதிய மாடலில் 1,200சிசி பேரலல் ட்வின் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 112 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலைவிட இந்த புதிய மாடலின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ட்ரையம்ஃப் தெரிவித்துள்ளது.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த பைக்கின் எஞ்சினின் ஆரம்ப மற்றும் நடுத்தர நிலை செயல்திறனில் மாறுதல்களை செய்துள்ளது ட்ரையம்ஃப். புகைப்போக்கி அமைப்பிலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக்கில் ஹாலஜன் பல்பு கொண்ட ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பைக்கில் இரட்டை குடுவை அமைப்புடைய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, யுஎஸ்பி சார்ஜர் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த பைக்கில் ரெயின், ரோடு மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமா ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், மர்சோஸ்ஸியின் முன்புற இன்வர்டெட் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஷாக் அப்சார்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த பைக்கின் முன்சக்கரத்தில் பிரெம்போ நிறுவனத்தின் பிரெம்போ எம்50 ரேடியல் காலிபர்கள், 320 மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. பின்புத்தில் நிஸின் 2 பிஸ்டன் காலிபர் மற்றும் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. 17 அங்குல காஸ்ட் அலுமினியம் சக்கரங்கள், மெட்ஸீலர் ரேஸ்டெக் ஆர்ஆர் டயர்கள் ஆகியவையும் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்தியா வரும் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

வரும் செப்டம்பர் மாதத்தில் புதிய ட்ரையம்ஃப் ஸ்பீடு ட்வின் பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. பிஎஸ்-4 மாடல் ரூ.9.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய மாடல் சற்று கூடுதல் விலையில் அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles

English summary
Triumph has revealed the 2021 Triumph Speed Twin globally. It is expected to hit in our country before festive season.
Story first published: Wednesday, June 2, 2021, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X