கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர உள்ளன... இவை உங்க பர்சை காக்கும்!!

2021ம் ஆண்டில் விற்பனைக்கு வரவிருக்கும் மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றிய தகவலை தொகுத்து வழங்கியுள்ளோம். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

சுற்றுச் சூழலுக்கு நண்பனாகவும், பாக்கெட்டிற்கு உகந்ததாகவும் மின் வாகனங்கள் பார்க்கப்படுகின்றன. எனவேதான், வாகன ஆர்வலர்களின் பார்வை தற்போது மின் வாகனங்களின் பக்கம் திரும்ப தொடங்கியிருக்கின்றது. இந்த நிலையை அறிந்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்கின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இதனால், உலகின் ஏதேனும் ஓர் மூலையில் தினசரி மின் வாகனத்தின் அறிமுகம் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. இந்தியாவிலும் மின் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்ற காரணத்தினால், நாட்டிலும் அவ்வப்போது புதுமுக மின்சார வாகனங்களின் அறிமுகம் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

அந்தவகையில், நடப்பு 2021ம் ஆண்டில் இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருக்கும் புதுமுக மின்சார ஸ்கூட்டர்கள் எவை என்பதைப் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். ஐந்து புதிய மின்சார ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டில் இந்திய சாலையைப் பதம்பார்க்க காத்திருக்கின்றன. அவை எவை? என்னென்ன சிறப்பு வசதிகளை எதிர்பார்க்கலாம் என்பதையே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, எடெர்கோ எனும் டட்ச் நாட்டு மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றான ஆப்ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மின்சார ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தமிழகத்தில் அமைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இங்கிருந்தே உலகின் பல்வேறு முன்னணி நாடுகளுக்கும் மின்சார ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. இந்த மின்சார ஸ்கூட்டர் அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 80 கிமீ ரேஞ்ஜ் எனும் திறனில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதற்கேற்ப 1.16 kWh பேட்டரி பேக்கில் இந்த ஸ்கூட்டர் பெற இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

மேலும், 6kW திறன் கொண்ட மின் மோட்டாரையும் ஆப்ஸ்கூட்டர் பெற இருக்கின்றது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 50 என்எம் டார்க்கை வெளியேற்றும். மேலும், 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 45 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும். இதுமட்டுமின்றி, ஸ்மார்ட்போன் இணைப்பு, ஓடிஏ அப்டேட், சேட்டலைட் நேவிகேஷன், ஆன்ட்ராய்டு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என எக்கசக்க வசதிகளை இது பெறவிருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக்:

உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுசுகி, அதன் பிரபல ஸ்கூட்டர்களில் ஒன்றான பர்க்மேன் மாடலிலேயே எலெக்ட்ரிக் ஸ்ஸகூட்டரை விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதனை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது இந்த ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இது ஓர் பிரீமியம் மின்சார ஸ்கூட்டர் ஆகும். ஆகையால், தற்போது இந்த தரத்தில் விற்பனையில் இருக்கும் 450எக்ஸ் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இது போட்டியாக அமையும். சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3kWh முதல் 4kWh திறன் கொண்ட லித்தியம் அயம் பேட்டரி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோன்று, 4kW முதல் 6kW திறனை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டாரிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இதன் அதிகபட்ச ரேஞ்ஜ் வெளிப்பாடு 80 கிமீட்டருக்கும் அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த வாகனம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதன் விலை பற்றிய தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், ரூ. 1.2 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-29:

ஹீரோ எலெக்ட்ரிக் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வரிசையில் அதன் ஏஇ-29 எனும் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த மாடலை அது முதல் முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதனைத் தொடர்ந்தே, இந்த ஆண்டிலேயே இந்த புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தைக் களமிறக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டரில் 1kW மின் மோட்டாரும், 3.5 kWh லித்தியம் அயன் பேட்டரியும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, டிஜிட்டல் திறனிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு, வால்க் அசிஸ்ட், திருட்டு தவிர்ப்பிற்கான சிறப்பு லாக் சிஸ்டம், ரிவர்ஸ் செய்யும் வசதி, செல்போன் சார்ஜர் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-29 ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

ஹீரோ இமேஸ்ட்ரோ:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நேரடி வெளியீடாக இமேஸ்ட்ரோ மின்சார ஸ்கூட்டர் அமைய இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் மேஸ்ட்ரோ மாடலும் ஒன்று. எனவேதான் இந்த மாடலில் மின்சார வெர்சனை களமிறக்க ஹீரோ முடிவு செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரும் இந்த ஆண்டிற்குள்ளாகவே அறிமுகத்தைப் பெற்றுவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இது அதிகபட்சமாக 80 கிமீ எனும் ரேஞ்ஜ் திறனில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன், ரூ. 1.25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரும் விலையில் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகலாம் என யூகிக்கப்படுகின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

ஒகினவா க்ரூஸர்:

பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ஒகினவா கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த க்ரூஸர் மேக்ஸி-ஸ்கூட்டரை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே நடப்பாண்டில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்த அது திட்டமிட்டிருக்கின்றது. இந்த வாகனத்தில் 4 kWh தனியாக பிரித்தெடுக்கும் லித்தியம் அயன் பேட்டரியையே நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றது.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... புதுசு புதுசா மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன... இது உங்க பர்சை பாதுகாக்கும்!!

இது ஒற்றை முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரை செல்லும். மேலும், இதனை சார்ஜ் செய்ய 2 முதல் 3 மணி நேரங்களே போதுமானது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 100 கிமீ ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான மின்சார ஸ்கூட்டர்களைத் தோற்கடிக்கும் வகையில் பல்வேறு அதிக சிறப்பு வசதிகளுடன் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

குறிப்பு: இதில் வழங்கப்பட்டிருக்கும் சில படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
2021 Upcoming Electric Scooters In India. Read In Tamil.
Story first published: Tuesday, February 9, 2021, 10:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X