Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 2 hrs ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- News
இறக்கும் முன்னர் கொரோனா விழிப்புணர்வு.. இறந்த பின் விவேக் மக்களுக்கு சொல்லும் அறிவுரை "இதுதான்!"
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செய்ய துவங்கியிருக்கும் மேக்ஸி-ஸ்கூட்டர்கள்!! இந்தியாவிலும் தொடருமா?
டபிள்யூ மோட்டோ ஆர்டி3 என்ற பெயரில் மேக்ஸி-ஸ்கூட்டர் ஒன்று தாய்லாந்து நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேக்ஸி-ஸ்கூட்டரை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தை மட்டுமின்றி உலகளவில் புதிய புதிய மேக்ஸி-ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், அறிமுகத்திற்கு தயாராகி வருவதையும் சமீப காலமாக பார்த்து வருகிறோம்.

இந்த வகையில் டபிள்யூ மோட்டோ ஆர்டி3 என்ற பெயரில் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் தாய்லாந்தில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை சீனாவை சேர்ந்த சோங்சென் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

சோங்சென் நிறுவனம் ஹார்லி-டேவிட்சன் மற்றும் பியாஜியோ நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து வாகனங்களை தயாரித்து வருகிறது. டபிள்யூ மோட்டோ ஆர்டி3 ஸ்கூட்டர், சீன ஆட்டோமொபைல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், தயாரிக்கப்பட்டது தாய்லாந்தில் தான்.

தாய்லாந்தில் இந்த மேக்ஸி-ஸ்கூட்டரின் விலை 15,188 RM ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.2.67 லட்சமாகும். மற்ற மேக்ஸி-ஸ்கூட்டர்களை போன்று டபிள்யூ மோட்டோ ஆர்டி3 ஸ்கூட்டரும் தோற்றத்தில் பெரியதாக உள்ளதை படத்தை பார்த்தாலே தெரிகிறது.

முன்பக்கத்தில் பெரிய அளவிலான எதிர்காற்று தடுப்பு கண்ணாடியை கொண்டுள்ள இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி இண்டிகேட்டர்களுடன் எல்இடி ஹெட்லேம்ப்பை ஸ்போர்டியான தோற்றத்தில் பெற்றுள்ளது.

அலாய் சக்கரங்கள் 10-ஸ்போக்கில் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப் நன்கு பெரியதாக கொண்டுள்ள இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் தாய்லாந்தில் மேட் க்ரே, பளபளப்பான நீலம் மற்றும் சிவப்பு என்ற மூன்று விதமான நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

செமி-டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரில் மற்ற சிறப்பம்சங்களாக இரு பின்னிணைப்பு யுஎஸ்பி துளைகள் மற்றும் சாவியில்லா என்ஜின் ஸ்டார்ட்டிற்கு ஸ்மார்ட் கீ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக மேக்ஸி-ஸ்கூட்டர் என்றாலே நீளத்திலும் பெரியதாக இருக்கும். ஆனால் 2021 டபிள்யூ மோட்டோ ஆர்டி3 நாம் எதிர்பார்ப்பதை காட்டிலும் பெரியதாக உள்ளது. அதிலும் இருக்கை அமைப்பு ஸ்கூட்டர் முடியும் வரையில் கொடுக்கப்பட்டுள்ளதால் பின் இருக்கையில் பயணி அமர்ந்திருந்தாலும், ஓட்டுனர் மிகவும் சவுகரியமாக செயல்பட முடியும்.

இருக்கைக்கு அடியில் ஹெல்மெட் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கான பகுதியிலும் எல்இடி விளக்கை வழங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டபிள்யூ மோட்டோ ஆர்டி3 ஸ்கூட்டரில் பெரிய அளவிலான 247சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மூலம் அதிகப்பட்சமாக 23.3 பிஎஸ் மற்றும் 22.5 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

ஒருவேளை டபிள்யூ மோட்டோ ஆர்டி3 மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானால் அது தான் நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் கொண்ட ஸ்கூட்டராக விளங்கும். ஆனால் உண்மையில் இந்த மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவிற்கு வருகை தர தற்போதைக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே.