மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

ஒருவழியாக 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் மோட்டார்சைக்கிள் உலகளவில் முழுமையாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டுகாட்டி அட்வென்ச்சர் பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

உலகளவில் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கும் டெசர்ட் எக்ஸ் அட்வென்ச்சர் பைக்கினை, அதன் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு பகுதியாக டுகாட்டி வெளியீடு செய்துவந்தது. இதன்படி கடைசி பகுதி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

1990ஆம் காலக்கட்டங்களில் டுகாட்டி பிராண்டின் சார்பில் ராலி போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ஐகானிக் மோட்டார்சைக்கிள்களினால் கவரப்பட்டு, நிறுவனத்தின் அல்டிமேட் ராலி மெஷினாக டெசர்ட் எக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பைக், அதிலிலும் குறிப்பாக தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ளதாக டுகாட்டி தெரிவிக்கிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

புதிய டெசர்ட் எக்ஸ் பைக்கில் நவீன பரிணாம வளர்ச்சி பெற்ற நீர்-குளிர்விப்பு 937சிசி டெஸ்மோட்ரோமிக் 11 டிகிரி டெஸ்டாஸ்ட்ரெட்டா என்ஜினை டுகாட்டி நிறுவனம் பொருத்தியுள்ளது. அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 110 எச்பி மற்றும் 92 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த புதிய பைக்கில் மொத்தம் 6 விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

இதில் இரண்டு மோட்கள் ஆஃப்-ரோடின் முழு அனுபவத்தை பயணிகள் பெறும் வகையில் உள்ளன. அதேநேரம் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பு, வீலிங் கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், விரைவு-கியர் மாற்றி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ரைடர் உதவி வசதிகளும் எலக்ட்ரானிக் தொகுப்பாக இந்த தொலைத்தூர பயணத்திற்கான மோட்டார்சைக்கிளிள் வழங்கப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

டெசர்ட் எக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எல்இடி விளக்கு அமைப்பு தான் தங்களிடம் இருப்பதிலேயே அதிகப்பட்ச நிலையிலான விளக்கு அமைப்பு என்று டுகாட்டி தெரிவித்துள்ளது. இந்த புதிய ராலி-அட்வென்ச்சர் பைக்கில் மற்றொரு சிறப்பம்சமாக, உயர்தெளிவு கொண்ட 5-இன்ச் டிஎஃப்டி திரை இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பகுதியில் செங்குத்தான நிலையில், ரைடிங் சூழலிற்கேற்ப பொருத்தப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

டுகாட்டி மல்டிமீடியா அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள் இந்த திரையின் வாயிலாக ஓட்டுனர் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை பைக்குடன் இணைக்க முடியும். இதில், டர்ன் பை டர்ன் நாவிகேஷனை ஆக்டிவேட் செய்தன் மூலம் ஒவ்வொரு திரும்புதலுக்கும் நாவிகேஷனை பெறலாம். தரையில் இருந்து 875மிமீ உயரத்தில் ரைடர் இருக்கையை கொண்ட டெசர்ட் எக்ஸ் பைக்கின் மொத்த எடை 202 கிலோ ஆகும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

இந்த விபரங்கள் தற்போது தான் நமக்கு டுகாட்டியின் இறுதி எபிசோடின் மூலம் தெரியவந்துள்ளன. ஆனால் டெசர்ட் எக்ஸ் பைக்கை பற்றிய சில விஷயங்கள் ஏற்கனவே தெரியவந்துவிட்டன. டுகாட்டி முதன்முதலாக டெசர்ட் எக்ஸ்-ஐ கான்செப்ட் மாடலாக 2019இல் காட்சிப்படுத்தியது. டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கின் வடிவமைப்பிற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஃப்ரேமில் தான் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

இதனால் தான் தோற்றத்தில் இரண்டும் கிட்டத்தட்ட ஒத்து போகின்றன. ஒரிஜினல் கான்செப்ட் மாடலில் 1,079சிசி இரட்டை-வால்வு, ஏர்-கூல்டு, டெஸ்மோட்ரோமிக் எல்-இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 86 எச்பி மற்றும் 4,750 ஆர்பிஎம்-இல் 88 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது என டுகாட்டி அப்போது தெரிவித்திருந்தது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

ஆனால் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள டெசர்ட் எக்ஸ்-இன் தயாரிப்பு வெர்சனில் 937சிசி டெஸ்டஸ்ட்ரெட்டா என்ஜினை வழங்கியுள்ளது. டுகாட்டி மல்டிஸ்ட்ராடா பைக்குகளில் வழங்கப்படும் 19-இன்ச் சக்கரங்களை போல் இல்லாமல், இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கில் 21 இன்ச்சில் முன் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 18 இன்ச்சில் உள்ளது. இந்த ஸ்போக் சக்கரங்களில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ப நன்கு அகலமான டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

அதேபோல் கச்சிதமான ஹேண்ட்லிங்கிற்காக ஹேண்டில்பார் அகலமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க் பகுதி நன்கு பருத்த வடிவில் வழங்கப்பட்டிருக்க, முன் சக்கரம் பெரியதாக வழங்கப்பட்டுள்ளதால், ரைடர் இருக்கை தாழ்வானதாக உள்ளது. இந்த புதிய டுகாட்டி பைக்கில் எக்ஸாஸ்ட் குழாய் சற்று மேல்நோக்கி வளைக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2022 டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக் வெளியீடு!! 202 கிலோவில், 937சிசி என்ஜின் உடன்...

சர்வதேச சந்தைகளில் டுகாட்டி டெசர்ட் எக்ஸ் பைக்கிற்கு போட்டியாக கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர், டிரையம்ப் டைகர் 900 ராலி ப்ரோ உள்ளிட்டவை உள்ளன. முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தில் அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன் புதிய பனிகளே வி4 சூப்பர்பைக்கை டுகாட்டி வெளியீடு செய்திருந்தது.

Most Read Articles

மேலும்... #டுகாட்டி #ducati
English summary
2022 Ducati DesertX Officially Revealed.
Story first published: Friday, December 10, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X