புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

அப்டேட் செய்யப்பட்ட கவாஸாகி வல்கன் எஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் புதிய நிறங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கவாஸாகி பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் இந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அதன் 650சிசி மோட்டார்சைக்கிள்களின் விலைகளை உயர்த்தியது. 650சிசி பைக்குகளுடன் சேர்த்து கவாஸாகியின் 1000சிசி மோட்டார்சைக்கிளான நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் பைக்கின் விலையும் உயர்த்தப்பட்டது.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

இந்த மோட்டார்சைக்கிள்களை தொடர்ந்து இந்தியாவில் விற்பனை செய்யும் மற்ற பைக்குகளின் விலைகளையும் கவாஸாகி நிறுவனம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப நிஞ்சா 650 மற்றும் இசட்650 பைக்குகளில் அப்டேட்கள் அதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்டன.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

புதிய கவாஸாகி நிஞ்சா 650 மற்றும் இசட்650 பைக்குகள் இந்தியாவில் அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவை இரண்டிலும் பெரியளவில் எந்த அப்டேட்டும் கொண்டு வரப்படவில்லை. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2022 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளை போன்று புதிய நிறத்தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

2022 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த கவாஸாகி பைக்கின் முந்தைய விலையை காட்டிலும் ரூ.6,000 மட்டுமே அதிகமாகும். இந்தியாவில் கவாஸாகி வல்கன் எஸ் பைக்கிற்கு நேரடி போட்டி பைக்குகள் எதுவும் இல்லை.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெனெல்லி 502சி மோட்டார்சைக்கிள் மட்டுமே விலையில் போட்டியாக உள்ளது. இருப்பினும் இந்த பெனெல்லி பைக்குடன் ஒப்பிடுகையில் வல்கன் எஸ் மாடல் கிட்டத்தட்ட ரூ.1.10 லட்சம் அதிகமான விலையினை கொண்டுள்ளது. பெனெல்லி 502சி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.98 லட்சமாகும்.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

இவை இரண்டுடன் ஹோண்டாவின் ரெபெல் 500 மோட்டார்சைக்கிளும் இந்த 2021ஆம் வருட இறுதிக்குள் இணையவுள்ளது. சரி மீண்டும் அப்டேட் செய்யப்பட்ட கவாஸாகி வல்கன் எஸ் பைக் பக்கம் செல்வோம். இந்த க்ரூஸர் ரக பைக்கில் புதிய மெட்டாலிக் மேட் க்ரே பெயிண்ட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

பெட்ரோல் டேங்க், ரேடியேட்டரின் பக்கவாட்டு கவர்கள் மற்றும் சக்கர ரிம் பகுதிகளில் பச்சை நிறத்தை கொண்டுள்ள இந்த புதிய பெயிண்ட் தேர்வில் உண்மையில் மோட்டார்சைக்கிள் மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் உள்ளது. ஏற்கனவே கூறியதுதான், இந்த புதிய பெயிண்ட்டை தவிர்த்து பைக்கின் மற்ற பாகங்கள் எதிலிலும் கை வைக்கப்படவில்லை.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

இதனால் வழக்கமான பிஎஸ்6-க்கு இணக்கமான 649சிசி, இணையான-இரட்டை என்ஜினை தான் 2022 வல்கன் எஸ் பைக்கும் பெற்று வந்துள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7500 ஆர்பிஎம்-இல் 61 பிஎஸ் மற்றும் 6600 ஆர்பிஎம்-இல் 62.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

இதேபோன்று மற்ற இயந்திர பாகங்களும் புதிய வல்கனில் அப்படியே தொடரப்பட்டுள்ளன. ஆனால் மேம்படுத்தப்பட்ட பயண அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக எர்கோ-ஃபிட்-ஐ வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளில் கவாஸாகி நிறுவனம் வழங்கியுள்ளது.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

இதன்மூலம் ஓட்டுனர் தனது கால் வைக்கும் பகுதியையும், இருக்கை அமைப்பையும் மற்றும் லிவரையும் தனது விருப்பத்திற்கு மற்றும் சவுகரியத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும். அமெரிக்காவில் கவாஸாகி வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் ‘கேஃப் (cafe)' வேரியண்ட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

ஆனால் இந்த வேரியண்ட் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால் இந்த வேரியண்ட்டின் இந்திய வருகையையும் விரைவில் எதிர்பார்க்கிறோம். அமெரிக்கா உள்பட சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த வேரியண்ட் 3-நிறங்களில் பெயிண்ட் செய்யப்படுவது அதன் சிறப்பம்சமாகும்.

புதிய நிறத்தில் 2022 கவாஸாகி வல்கன் எஸ் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.6.10 லட்சம்

ரூ.6.10 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டாலும், இந்தியாவில் தற்சமயம் விற்பனைக்கு கிடைக்கும் மலிவான மத்திய-இடப்பெயர்ச்சி (500சிசி- 650சிசி) க்ரூஸர் பைக்காக கவாஸாகி வல்கன் எஸ் விளங்குகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பெயிண்ட் தேர்வு நிச்சயம் இந்த பைக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் முன்னிலை படுத்தும் நம்புகிறோம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Kawasaki Brings In The 2022 Vulcan S In India With New Colours.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X