விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில், 4 முக்கியமான பைக்குகள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். இந்த பைக்குகள் 2022ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு ஸ்கிராம் 411 (Royal Enfield Scram 411)

ராயல் என்பீல்டு நிறுவனம் தனது லைன்அப்பில் ஸ்கிராம்ப்ளர் பைக் ஒன்றை சேர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய பைக் ராயல் என்பீல்டு ஹிமாலயன் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. எனவே ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இடம்பெற்றிருக்கும் அதே 411 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்படவுள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 24.31 பிஎஸ் பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஹிமாலயன் பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு பதிலாக மீட்டியோர் 350 பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இந்த பைக்கில் வழங்கப்படும் என தெரிகிறது. ஸ்பை படங்கள் மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு 650 சிசி க்ரூஸர் (Royal Enfield 650cc Cruiser)

ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி க்ரூஸர் பைக் ஒன்றை இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய க்ரூஸர் பைக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 எக்மா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில், எஸ்ஜி 650 என்ற பெயரில், கான்செப்ட் வடிவத்தில் இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டது.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான் இந்த புதிய பைக்கிலும் பொருத்தப்படவுள்ளது. இது 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47.65 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு 650 சிசி ரோட்ஸ்டர் (Royal Enfield 650cc Roadster)

650 சிசி க்ரூஸர் பைக்குடன் 650 சிசி ரோட்ஸ்டர் பைக் ஒன்றையும் ராயல் என்பீல்டு நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இது கிளாசிக் 650 ஆக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதனை இன்னும் உறுதி செய்ய முடியவில்லை. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளில் இருக்கும் அதே இன்ஜின்தான் இந்த பைக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த பைக்குகளை விட இது இன்னும் அதிக பிரீமியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

ராயல் என்பீல்டு ஹண்டர் (Royal Enfield Hunter)

350 சிசி ரோட்ஸ்டர் பைக் ஒன்றையும் ராயல் என்பீல்டு நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இது ஹண்டர் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளில் இருக்கும் அதே 349 சிசி இன்ஜின்தான் இந்த பைக்கிலும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ராயல் என்பீல்டு பைக்குகள்... எல்லாத்தையுமே வாங்கணும் போல இருக்கே!

இளம் தலைமுறை ரைடர்களை குறிவைத்து இந்த ராயல் என்பீல்டு ஹண்டர் பைக் களமிறக்கப்படுகிறது. இந்த பைக்கிற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் சவாலான விலையை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. விலை நிர்ணயம் சரியாக இருந்தால், ராயல் என்பீல்டு ஹண்டர் நிச்சயமாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
4 upcoming royal enfield motorcycles
Story first published: Friday, December 17, 2021, 23:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X