கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ராயல் என்பீல்டு பைக்கை வாங்குவதற்கு முன்பு நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. ராயல் என்பீல்டு பைக்குகளை பெருமிதத்திற்காகவும் பலர் வாங்கி கொண்டுள்ளனர். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் உரிமையாளர் என்ற அந்தஸ்தை அடைவதற்கு நம்மில் பலரும் அதிக ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை நீங்கள் வாங்குவதாக இருந்தால், அதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன? என்பதைதான் நாங்கள் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதிவேகத்தில் செல்வதற்கு அல்ல!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பல்வேறு மோட்டார்சைக்கிள்கள் க்ரூஸர்களாக அறியப்படுகின்றன. இதன் காரணமாகதான் டூர் செல்பவர்கள் ராயல் என்பீல்டு பைக்குகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பின் பகுதியில் மூட்டை, முடிச்சுகளை கட்டிக்கொண்டு ராயல் என்பீல்டு பைக்கில் தொலை தூர பயணம் மேற்கொள்பவர்களை நீங்கள் நெடுஞ்சாலைகளில் சர்வ சாதாரணமாக காணலாம்.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ராயல் என்பீல்டு பைக்குகள் ஆக்ஸலரேஷனை அனுபவிப்பதற்கோ அல்லது அதிவேகத்தில் பயணிப்பதற்கோ ஏற்றவை அல்ல. மாறாக மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் 'க்ரூஸ்' செய்வதற்கான பைக்குகள்தான் இவை. இந்த வேகம்தான் ராயல் என்பீல்டு பைக்குகளுடைய இன்ஜினின் 'ஸ்வீட் ஸ்பாட்' ஆகும்.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

முன்பை விட இப்போ ரொம்ப மாடர்ன்!

ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தன் மோட்டார்சைக்கிள்களில் ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்குகிறது. மத்திய அரசு கொண்டு வர பாதுகாப்பு விதிமுறைகளே இதற்கு காரணம். முன் மற்றும் பின் என இரண்டு சக்கரங்களிலும் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்படுகிறது. பதற்றமான சூழல்களில் பிரேக் பிடிக்கும்போது கீழே விழுவதற்கான வாய்ப்புகளை இது குறைக்கிறது.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

மேலும் கார்புரேட்டர்களுக்கு பதிலாக தற்போது ஃப்யூயல் இன்ஜெக்ஸன் உடன் ராயல் என்பீல்டு பைக்குகள் வருகின்றன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. இது ராயல் என்பீல்டு பைக்குகளின் இன்ஜினை மென்மையாக்கியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்கள் முன்பை விட தற்போது மாடர்ன் ஆகி விட்டன.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

மைலேஜ் பாத்துக்கோங்க பாஸ்!

இந்தியாவில் எரிபொருள் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே மைலேஜ் அதிகமாக கிடைக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், ராயல் என்பீல்டு பைக்குகள் உங்களுக்கு ஏற்றவை கிடையாது. ஏனெனில் ராயல் என்பீல்டு பைக்குகளில் அவ்வளவாக மைலேஜ் கிடைக்காது. இன்ஜினின் அளவை பொறுத்து, லிட்டருக்கு 25-35 கிமீ மைலேஜ் கிடைக்கவே வாய்ப்புகள் உள்ளன.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

பராமரிப்பு செலவும் அதிகம்!

ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டுவது உங்களுக்கு மன மகிழ்ச்சியை தரலாம். ஆனால் அது உங்களுக்கு செலவு வைத்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். வழக்கமான ஒரு பைக்குடன் ஒப்பிடும்போது ராயல் என்பீல்டு பைக்கிற்கான சர்வீஸ் செலவு கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். அத்துடன் உதிரிபாகங்களும் சற்று விலை உயர்ந்தவை.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஹெவி வெயிட்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அனைத்து மோட்டார்சைக்கிள்களும் மிகவும் எடை மிகுந்தவை. அவற்றின் எடை சுமாராக 200 கிலோ இருக்கும். எனவே புதியவர்களால் ராயல் என்பீல்டு பைக்குகளை கையாள்வது சற்று சிரமமான காரியம். ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் கீழே விழுந்து விட்டால், அதனை எப்படி தூக்குவது? என்பதை தெரிந்து வைத்து கொள்வது கூட முக்கியமானதுதான்.

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

நீங்கள் தவறாக தூக்கினால், முதுகு படாதபாடு பட்டு விடும். பொதுவாக பெண்களால் ஸ்கூட்டர்களில் கூட சென்டர் ஸ்டாண்டு போட முடியாது என சிலர் கிண்டல் செய்வார்கள். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளை பொறுத்தவரை, ஆண்களாலேயே சில சமயங்களில் சென்டர் ஸ்டாண்டு போட்டு நிறுத்த முடியாது என்பது வேதனையான உண்மை!

கெத்து கெத்துன்னு போய் மாட்டிக்காதீங்க... ராயல் என்பீல்டு பைக் பற்றிய இந்த 6 விஷயங்களை யாரும் சொல்ல மாட்டாங்க!

ரீசேல் வேல்யூ!

ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு நல்ல ரீசேல் வேல்யூ இருக்கிறது. ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு சந்தையில் நல்ல டிமாண்ட் இருந்து வருவதே இதற்கு காரணம். அத்துடன் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கான காத்திருப்பு காலம் அதிகம் என்பதாலும் கூட, சிலர் செகண்ட் ஹேண்ட்டில் வாங்கி கொள்கின்றனர். வாங்கிய விலையை விட அதிக விலைக்கு கூட ஒரு சிலர் பைக்குகளை விற்றுள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்!

Most Read Articles

English summary
6 Important Things To Consider Before Buying A Royal Enfield Motorcycle. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X